வித்யா – சேவை ரத்னா விருது – ஆட்டோ ஓட்டுநர் – ஊட்டி
இன்று (15-Aug-2022) வித்யாவின் 11 வருட உழைப்பை பாராட்டி டாக்டர் அப்துல் கலாம் அறக்கட்டளை சார்பில்
“சேவை ரத்னா” விருது வழங்கப்பட்டுள்ளது.
ஊட்டி போன்ற மலை மேடுகளில் ஆட்டோ ஓட்டுவது எளிதல்ல.
1. குறுகலான பாதை,
2. மேடு பள்ளங்கள்,
3. ஆள் நடமாட்டம் இல்லாத சுற்றுலா இடங்கள்,
4. ஒரு பெண் ஓவர்டேக் செய்தால் ஆண் டிரைவர்களின் வசவுகளை கண்டிப்பாக எதிர்கொள்ள வேண்டிய நிலை என நிறைய சவால்கள் இருக்கிறது.
மற்ற பெண்களுக்கு இந்த 11 வருடங்களில் தைரியமூட்டி வழிகாட்டியாக இந்த ஆட்டோ ஓட்டும் தொழிலை அவர்கள் தேர்ந்தெடுக்க காரணமாக இருந்திருக்கிறார்.
இன்று ஊட்டியில் 10க்கும் மேற்பட்ட பெண் ஆட்டோ ஓட்டுநர்கள்.
மென்மேலும் பல விருதுகள் பெற வாழ்த்துகள் வித்யா.
#Vidya #Ooty #Auto
#SivashankarJagadeesan
#சிவஷங்கர்ஜெகதீசன்
