மாமனிதன் சிறப்புக் காட்சி
மாமனிதன் சிறப்புக் காட்சி இயக்குநருடன் காணும் வாய்ப்பு கிடைத்தது.
இயக்குநர் சீனு ராமசாமி அவர்களின் 3 படங்கள் இந்த படத்தோடு சேர்த்து பார்த்திருக்கிறேன்.
எதை திரையில் கொடுக்கக்கூடாது என்ற இவரின் தெளிவு அட்டகாசம்.
தேவையில்லாத build up, அலங்காரங்கள், பூச்சுகள், இரைச்சல் இது எதுவும் இவரது படங்களில் இல்லை.
தெளிந்த நீரோடை போல ஒரு யதார்த்தமான கிராமத்து கதை, அதில் ஒரு படிக்காத குடும்பத் தலைவன் தெரியாத வேலையை தொடும் போது வரும் இன்னல்களை, விளைவுகளை படமாக்கியிருக்கிறார்.
கதாப்பாத்திரங்கள் விஜய்சேதுபதி, குரு சோமசுந்தரம், காயத்ரி, Shaji Chen மிகையில்லாத சிறப்பான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள்.
#மாமனிதன் #இயக்குநர்
#சீனுராமசாமி #சிவஷங்கர்ஜெகதீசன்
#Maamanithan #directorseenuramasamy #SeenuRamasamy
#SivashankarJagadeesan

