முதல் குறும்படம் – தமிழனாக இருந்தால் ஷேர் செய்யவும்
முதல் குறும்படம் எழுதி, இயக்கிருக்கிறேன். Comedy Genre.
“தமிழனாக இருந்தால் ஷேர் செய்யவும்”; ரப்பர் வளையல்கள் சிறுகதைத் தொகுப்பில் 9 ஆவது கதை.
இணையத்தில் ஒரு forwarded message இறப்பதே இல்லை. அது பல வருடங்களாக சுற்றிக் கொண்டே இருக்கிறது. அது பல விளைவுகளை ஏற்படுத்துகிறது. அதைப்பற்றி நகைச்சுவையாக எழுதிய சிறுகதை “தமிழனாக இருந்தால் ஷேர் செய்யவும்”.
முதல் குறும்படம் சீரியசான கதையாக எடுக்காமல் அனைவரும் ரசித்து சிரிக்கும்படி எடுக்க வேண்டும் என இந்த சிறுகதையை படமாக்கியிருக்கிறோம்.
12 நடிகர்கள், 6 Scene கள், 5 location, என ஒரே நாளில் படமாக்கியிருக்கிறேன்.
சிறந்த தொழில்நுட்ப கருவிகள் மற்றும் கலைஞர்கள் என சிறப்பாக வந்திருக்கிறது. உங்களை சிரிக்க வைக்கும் என நம்புகிறேன்.
குழுவாக என்னுடன் இந்த குறும்படத்தில் பயணித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.
#தமிழனாகஇருந்தால்ஷேர்செய்யவும்
#சிவஷங்கர்ஜெகதீசன்
#குறும்படம்
#ThamizhanagaIrundhaalShareSeyyavum
#SivashankarJagadeesan
#ShortFilm
