
Raaja by RaGa – RanjaniGayatri – கிரஹபேத மாலை – சின்ன கண்ணன் அழைக்கிறான் – ஒரு பார்வை
ஞாயிறு மாலை(06-June-2022) மியூசிக் அகாதெமியில் நடந்த #RaajabyRaGa நிகழ்ச்சி இசைப்ரியர்களுக்கு ஒரு இனிமையான மாலை.
“இசைஞானி” இளையராஜா அவர்கள் வந்து குத்துவிளக்கை ஏற்றி வைத்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
சற்றே காலதாமதமாக இரவு 7:15 மணிக்கு நிகழ்வு தொடங்கியது. முதலில் காயத்ரி இசைஞானி பாடல்களில் ராகங்களை எப்படி பயன்படுத்தினார் என விளக்க ஆரம்பித்தார்.
பிறகு காயத்ரி – ரஞ்சனி இணைந்து ஆரம்பித்தது
- மரி மரி நின்னே – பாடறியேன் படிப்பறியேன்
சகோதரிகள் இருவரில் காயத்ரி துடிப்புடன் பல ஸ்வரங்களையும், பிருஹாக்களையும் எல்லா பாடல்களையும் ஆரம்பித்து கொடுத்தார்.
ரஞ்சனி “தோனி போல்” ஆற அமர ஸ்வரங்களை பாடி வயலின், மிருதங்கம், கடம் வாசித்த கலைஞர்களை நடுநடுவே ஊக்கப்படுத்தி அழகாக கச்சேரியை எடுத்துச் சென்றார்.
- இதழில் கதை எழுதும் நேரமிது
இரண்டாவதாக காய்த்ரி ஸ்வரங்களை பாடி பொறுமையாக “இதழில் கதை எழுதும் நேரமிது” பாடலுக்கு வந்தார். ஒவ்வொரு பாடலையும் தாங்கள் கண்டுபிடிக்கும் போது இசை ரசிகர்கள் கை தட்டி உற்சாகப்படுத்தினர்.
பின்னர் ஏழு ஸ்வரங்களுக்கான ஏழு ராஜாவின் பாடல்களை பாட ஆரம்பித்தனர், கடைசியில் ஒரு Twist என்று காயத்ரி சொல்லியிருந்தார்.

- ஸ – சலநாட்டை – பனி விழும் மலர்வனம்
- ரி – நளினகாந்தி – எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீ தானா
- க – கேதாரம் – இது ஒரு பொன்மாலை பொழுது
- ம – வசந்தா – அந்தி மழை பொழிகிறது
- ப – காப்பி – கண்ணே கலைமானே
- த – சிவரஞ்சனி – அழகே அழகு தேவதை
- நீ – பட்தீப் – மீரா வருவாளா? கண்ணன் கேட்கிறான். கண்ணா வருவாயா? மீரா கேட்கிறாள்.
- ஸ ப ஸ – சரசாங்கி – மல்லிகையே மல்லிகையே தூதாக போ
கடைசியில் ஒரு Twist என்றவர்கள் “ஸ ப ஸ ” வைத்து “மல்லிகையே மல்லிகையே தூதாக போ” என முடித்தார்கள்.
- பிறகு கல்யாணியில் பாடிய பாடல்
“கலைவாணியே…உனைத்தானே அழைத்தேன்”
மிருதங்கம், கடம் இரண்டும் “கணீர் கணீர்” என சிறப்பாக ஒலித்தது இந்த பாடலில்.
கிரஹ பேத மாலை
பின்னர்
ஹம்சா நந்தி யில் வரும் வேதம் அனுதினம் ஒரு ராகம் எனும் பாடலை base raaga வாக எடுத்துக் கொண்டு ஒரு ஆறு பாடல்களை ஸ்வரங்களில் ஆரம்பித்து அட்டகாசமாக தொகுத்தார்கள்.
- வேதம் அனுதினம் ஒரு ராகம்
- நான் தேடும் செவ்வந்திப்பூ
- கோயில் மணி ஓசை தனை கேட்டதாரோ
- ராகவனே ரமணா ரகுநாதா
- நின்னுக்கோரி வர்ணம்
- துள்ளித் துள்ளி நீ பாரம்மா
ராகம் தாளம் பல்லவி – Masterpiece
இதுவே நாங்கள் பாடப்போகும் MasterPiece என அறிவித்து
- ரீதிகௌளை – சின்ன கண்ணன் அழைக்கிறான் பாடலை பலவிதமாக develop செய்தனர்.
வயலின், மிருதங்கம் , கடம் என மூன்று பேரும் இந்த Master piece இல் சிறப்பான பங்களிப்பை அளித்தனர்.
நிறைய Variations கொடுத்து முடித்தார்கள். ஒரு பெரிய Applause அரங்கத்தினரிமிருந்து. ராஜா சாரும் வெகுவாக கைத்தட்டி ரசித்தார்.
- தேணுகா – மாயோனே
அடுத்து ராஜா சாருக்காக படத்தில் பாடிய “மாயோனே” பாடலை பாடினார்கள்.
ஒரு இனிமையான மாலைப்பொழுதாக கானமழையில் மொத்த அரங்கையும் கட்டிப்போட்டனர்
என்றே சொல்ல வேண்டும்.