இயக்குநர் JD அவர்களுடனான சந்திப்பு
சென்ற வருடம், பக்கத்து தெருவில் உள்ள மோகன் ஸ்டுடியோ வில் ஒரு மழைநாள் மாலையில் “தி லெஜண்ட்” படத்தின் “Mosalo Mosalu” பாடல் ஷூட்டிங் நடைபெற்று கொண்டிருந்தது.
இயக்குநர்கள் JD-Jerry அவர்களை சந்தித்து என் சிறுகதைத் தொகுப்பை அளிக்கலாம் என நினைத்தும் ஏனோ அன்று செல்லவில்லை.
விரைவில் அவரை சந்தித்து விடுவோம் என்று மட்டும் மனம் சொல்லிக் கொண்டேயிருந்தது.
#வாசிப்புப்போட்டி2021 பரிசளிப்பு விழா முடிந்த 2 நாட்களில் நம் முகநூல் குழுவில் இணைந்து கவிஞர், இயக்குநர் Brindha Sarathy அவர்கள் எழுதிய “பாஷோ என் பக்கத்து வீட்டுக்காரர்” மற்றும் கவிஞர் பழினிபாரதி அவர்கள் எழுதிய “பூரண பொற்குடம்” ஆகிய கவிதைத் தொகுப்புகளுக்கு வாசிப்பனுபவம் எழுதியிருந்தார்.
இன்று(03-June-2022) இயக்குநர் JD(Joseph D Sami) அவர்களை சந்தித்து பேச முடிந்தது.
உல்லாசம்(1997) மற்றும் விசில்(2003) படங்களின் இயக்குநர்.
500 க்கும் மேற்பட்ட விளம்பரங்கள், தொலைக்காட்சி தொடர்கள் என ஜெர்ரி அவர்களுடன் 30 வருடங்களுக்கும் மேலாக இணைந்து இயக்கியிருக்கிறார்.
இயக்குநர்கள் JD- Jerry – இருவரும் கல்லூரி நண்பர்கள் என்றாலும் 30 வருடங்களுக்கும் மேலாக பிரியாமல் இணைந்து பணியாற்றி வருவதென்பது சாதாரண விஷயமில்லை. இதற்கு தான் முதலில் நாம் பாராட்ட வேண்டும்.
JD அவர்கள் இயக்குநர் பாலு மகேந்திரா அவர்கள் “கடிதம்” கதையை தொலைக்காட்சித் தொடராக பார்த்து பாராட்டியதை பெருமையாக நினைவுகூர்ந்தார்.
எழுத்தாளர் சுந்தர ராமசாமி அவர்களின் “காலிப்பெட்டி” கதையையும் தொலைக்காட்சி தொடராக இயக்கியிருக்கிறார்.
தங்கள் தந்தையரின் பெயரில் “ராபர்ட் – ஆரோக்கியம் அறக்கட்டளை” என ஆரம்பித்து சிறந்த எழுத்தாளர்களுக்கு விருதளித்து கெளரவித்திருக்கிறார்கள்.
#வாசிப்புப்போட்டி2022 மற்றும் #filmreviews2022 பற்றி கேட்டறிந்தார்.
என்னுடைய ‘ரப்பர் வளையல்கள்” மற்றும் “வெட்கமறியாத ஆசைகள்” சிறுகதைத் தொகுப்புகளை அவருக்கு வழங்கினேன்.
அவருடைய “விளம்பரப் படம் வேற லெவல்” புத்தகத்தை எனக்கு வழங்கினார். படிக்க படிக்க வியப்பான தகவல்கள், புகைப்படங்கள்.
சிறப்பான சந்திப்பாக அமைந்தது.
