

நம் குழுவின் Manisekaran அவர்கள் மற்றும் PrahashArjun அவர்கள் நேற்று என் வீட்டிற்கு வந்தது சிறப்பான நாளாக அமைந்தது.
அருமை நண்பர் சிவசங்கர் ஜெகதீசன் அவர்கள்!
Film fans club குழுவின் அட்மின்.இந்தக் குழுவால் சினிமா கட்டுரைகளுக்காக எனக்கு விருதும் கொடுக்கப்பட்டது.
ஞாயிற்றுக்கிழமை நண்பரை சந்திக்க முடிவு செய்து,நண்பர் பிரகாஷ் அர்ஜீன் அவர்களையும் உடன் அழைத்துச் சென்றேன்.
நாங்கள் சென்றபொழுது ஏற்கெனவே வந்திருந்த திரைத்துறை நண்பர்களுக்கு ஒரு தாய் உணவை பறிமாறிக் கொண்டிருப்பதைப் போல் பறிமாறிக்கொண்டிருந்தார் நண்பர் சிவசங்கர்.
அவரிடமும் அதை குறிப்பிட்டு சொன்னேன்.சிரித்துக் கொண்டே எங்களையும் சாப்பிட வற்புறுத்தினார்.நண்பர் ஏற்கெனவே உணவை கங்காரு போல சுமந்து வந்து கொண்டிருந்ததால் சாப்பிட மறுத்தோம்.பிறகு,பழச்சாறு அளித்தார்.வெயிலுக்கு இதமாகவே வயிற்றையும் மனதையும் குளிர்வித்தது.
சில பேர் உணவு பறிமாறுவதிலேயே நமக்கு பாதி வயிறு நிரம்பிவிடும்.காரணம்,அதில் அவர்களுடைய அன்பும் தட்டு நிறைய நிரப்பி கொட்டுவதால்.அந்த வகையச் சார்ந்தவர்தான் நண்பர் சிவசங்கர் அவர்களும்.
நேரம் போனதே தெரியாமல் பேசிக்கொண்டேயிருக்கிறோம்.கடிகாரத்தைப் பார்த்தால் மணி மூன்று.எங்களது சோற்று மூட்டையை அவிழ்த்தோம்.நண்பர் பிரகாஷ் அர்ஜீன் அவர்களின் மனைவி தயாரித்து கொடுத்தது.சுவையாகவே இருந்தது.மறுபடியும் எங்களுக்கு தேவையான Side dish-ஐ எல்லாம் எடுத்து வைக்க வந்து விட்டார்.
‘என்னங்கடா உங்க சட்டம்’,என்ற படத்தின் பின்னணி சம்பவங்களைக் இயக்குனர் மணிமாறன் சொல்லக் கேட்டு அசந்து போனோம்.
நண்பர் ஜெகதீசன் எனது Project சம்மந்தமா சில முன்னெடுப்புகளை செய்து தருவதாக கூறியுள்ளார்.
அவருடைய உதவி செய்யும் அந்த எண்ணத்திற்கு மிக்க நன்றி.
அவர் எழுதிய ‘வெட்கமறியாத ஆசைகள்,’எனும் சிறுகதைத் தொகுப்பையும் அன்பளிப்பாக வழங்கினார்.
IT கம்பெனியில் வேலை பார்த்துக் கொண்டே சினிமா,இலக்கியம் என இரண்டின் மீதும் லாவகமாக சவாரி செய்து கொண்டு வருகிறார்.
மிகச்சிறந்த மனிதர்;நீடுழி வாழ வேண்டும்.