
அறமும் விதையும் அரவிந்
இன்று(26-May-2022) மாலை நம் குழுவின் அரவிந் அவர்கள் வீட்டிற்கு வந்திருந்தார்.
நேற்று #வாசிப்புப்போட்டி2021 மூன்றாம் பரிசு பெற்றவர்களுக்கு புத்தகங்கள் அனுப்ப தயாரான போது அரவிந் வீட்டிற்கு வந்து உங்களிடம் வாங்கிக் கொள்கிறேன் என்று சொல்லியிருந்தார்.
இரண்டு மணி நேரங்களுக்கு மேலாக இன்று மாலை பேசிக் கொண்டிருந்தோம்.
கொரோனா காலக்கட்டத்தில் Volunteer ஆக பல உதவிகளை செய்திருக்கிறார். அவருடைய வாசிப்பு, பணி என நிறைய விஷயங்கள் பகிர்ந்து கொண்டார்.
அவருடைய பரிசுக்கோப்பை, பரிசுப் புத்தகங்கள் வாங்கிக் கொண்டு இப்போது தான் கிளம்புகிறார்.
சிறப்பான மாலைப்பொழுது.