திரு. நடராஜன் அவர்களுடனான சந்திப்பு
திரு.நடராஜன் அவர்கள் நம் #வாசிப்புப்போட்டி2021 இல் 100 புத்தகங்கள் பதிவிட்டு இரண்டாம் பரிசு பெறுகிறார்.
நேற்று மாலை அவரை சந்தித்து ₹1000 மதிப்பிலான புத்தகங்களை வழங்கினோம்.
வரவேற்று மிகவும் பொறுமையாக புத்தகங்கள், வாசிப்பு பழக்கம், எழுத்தாளர்கள் என பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.
விடைபெறும் போது அவருடைய இரண்டாவது புத்தகமான “நிமிர்த்திய வார்த்தைகள்” கவிதைத் தொகுப்பை வழங்கினார்.
தன்னுடைய கவிதைத் தொகுப்பிலும் புத்தக வாசிப்பை முன்னிறுத்தியிருக்கிறார்.


அவருக்கு நம் Books and Readers தமிழ் மற்றும் Films and fans குழுக்களின் சார்பில் வாழ்த்துகள்.