தலைமையாசிரியர் சீனி.சந்திரசேகரன் அவர்களுடனான சந்திப்பு
நேற்று செங்கல்பட்டு சென்று நம் #வாசிப்புப்போட்டி2021 வெற்றியாளர் தலைமையாசிரியர் சீனி.சந்திரசேகரன் அவர்களை சந்தித்து ₹5000 மதிப்பிலான புத்தகங்களை வழங்கினோம். என்னுடன் தம்பி Ramesh ம் வந்திருந்தார்.
சீனி சந்திரசேகரன் அவர்கள் எங்களை ரயில் நிலையத்திலேயே வந்து அழைத்துச் சென்று மாலை முழுவதும் அவருடைய அனுபவங்கள், புத்தகங்கள், எழுத்தாளர்கள் எனப் பேசினோம்.
தாம்பரத்தில் பல வருடங்கள் வாழ்ந்திருந்தாலும் செங்கல்பட்டில் இறங்கி அந்த நகரத்தை இன்று வரை சுற்றி வந்தது கிடையாது. நேற்று மாலை அந்த
அனுபவம் கிடைத்தது.
இப்போது பணியாற்றும் பள்ளியில் நூலகத்திற்கும், மாணவர்களுக்கும் அளிக்க இருக்கும் புத்தகங்களை எடுத்து வந்து காட்டினார்.
வீட்டின் மாடியில் அவருடைய அனுபவங்களை கேட்பதும், புத்தகங்கள், புத்தகத்திருவிழாக்கள், எழுத்தாளர்கள் என விவாதிப்பதும் என அருமையான மாலைப் பொழுதாக அமைந்தது.

