Turf Toe – கால் கட்டை விரல் சுளுக்கு வலி – ரத்தக்கட்டு – அவதி
ஒன்று போனால் மற்றொன்று வந்தது என்பது போல் கொரோனா தொற்று போய் இந்த கால் கட்டை விரல் சுளுக்கு 7 முதல் 10 நாட்களாக நடக்க முடியாமல் செய்து விட்டது.
கால் கட்டை விரலின் முட்டு அருகில் 10 நாள் முன்பு காலையில் எழுந்த போது ரத்தக்கட்டும் அதைத் தொடர்ந்து நடக்க முடியாமல், கால் ஊன்ற முடியாமல் வலியும் அதிகரித்தது.
ICE water compression, புளி+ கல் உப்பு+ மஞ்சள் சேர்த்த பத்து, Volini, Omni Gel என ஒன்றையும் விடவில்லை.
வலியும் விட்டமாதிரி இல்லை. ஒரு நாள் புளிப்பத்து போட்டு அடுத்த நாள் காலை சரியாகி விடும் என்று நினைத்தால் அடுத்த நாள் அதற்கு மேல் வீங்கி இன்னும் ஆச்சர்யத்தையும், அவதியும் கொடுத்தது.
Pain Killer இந்த 10 நாட்களாக எடுத்துக் கொள்ளவில்லை.
ஒரு பழைய massage roller தேடிக் கண்டுபிடித்து அதில் Cipla Omni Gel போன்ற Pain Relief Cream ஐ வைத்து roll செய்து கொள்கிறேன், இன்னும் ஒரு வாரத்தில் பழையபடி திடமாக நடக்க முடியும் என்ற நம்பிக்கையில்.
