கொரோனா தொற்று – Dec 30, 2021 – சென்னை பெருமழை – Metro Train

கொரோனா தொற்று – Dec 30, 2021 – சென்னை பெருமழை – Metro Trainகொரோனா தொற்று – Dec 30, 2021- சென்னை பெருமழை – Metro Train

கொரோனா தொற்றில் இருந்து முழுவதும் மீண்டிருக்கிறேன்.

Dec 30, 2021 அன்று சென்னை பெருமழையில் Mount Road இல் சரவணன் தங்கப்பா வின் “சிந்தனை விருந்தகத்தில்” சிக்கிக் கொண்டேன்.

Uber இல் சென்றதால் வரும் போது வண்டி கிடைக்கவில்லை. 6 மணி முதல் காத்திருந்து பார்த்தும் Uber, Ola Car, Auto இல்லை. மழையும் விட்டபாடில்லை. போக்குவரத்து நெரிசல் வேறு.

வீடு வந்து சேர ஒரே வழி Metro Train + நடை மட்டும் தான்.

DMS Metro station க்கு சரவணன் தங்கப்பா வண்டியில் ஓட்டிக் கொண்டு சென்று உள்ளே பார்த்தால் பயணச்சீட்டு வாங்க ஒரு பெரிய வரிசை. 30 நிமிடம் நின்று பயணச்சீட்டு பெற்று Train இல் ஏறினால் அதிலும் கூட்டம்.

இங்கு தான் எனக்கு ஒமிக்ரான் தொற்று பரவியிருக்க வேண்டும். பிறகு வடபழனி ஸ்டேஷன் வந்து வெளியே வந்தால் மழை விட்டபாடில்லை. பொறுத்து பொறுத்து பார்த்து பொறுமையிழந்து நனைந்து கொண்டே 2 கி.மி நடக்க ஆரம்பித்தேன்.

தொப்பலாக நனைந்த பிறகு நிற்க விருப்பமில்லை‌. முட்டியளவு தண்ணீரில் சில இடங்களில் நடப்பது சிரமமாக இருந்தது. சில இடங்களில் கால் வைக்கலாமா என தயக்கம் இருந்தது. தரை சரியாக தண்ணீர், சேற்றில் தெரியவில்லை.

ஒரு வழியாக அருணாச்சலம் ரோடு வந்து ஒரு கடையில் குடை வாங்கி வெளியே வந்தால் மழை நின்று விட்டது. மணி இரவு 9 மணி.

அப்படியே முட்டியளவு தண்ணீரில் நடந்து வீடு வந்து சேர்ந்தேன். ஜனவரி 2, ஜனவரி 3 இடைவிடாத இருமல், ஜுரம்.

மூச்சுத்திணறலும் இருப்பதாக தோன்ற இரவு 1 மணிக்கு Sooriya Hospital சென்று மருத்துவரைப் பார்த்து மாத்திரை, Blood test எடுத்து Antibiotic ஊசி செலுத்திக் கொண்டேன்.

Jan 6, 2022 திரும்ப சூரியா மருத்துவமனைக்கு ஜூரம் குறையவில்லை என செல்ல(மாத்திரை தீர்ந்ததும் ஒரு காரணம்) RT PCR test voluntary ஆக எடுத்தேன்.

அடுத்த நாள் காலேயிலேயே result வருவதற்குள் corporation இல் இருந்து ஒருவர் phone செய்து ” உங்களுக்கு Covid19+ve” எனச் சொல்லி டாக்டர் வீட்டு வாசலில் காத்திருப்பதாக கூறினார்.

வீட்டிற்கு வந்த டாக்டர் Azithromycin 500 தினமும் 1 போடச் சொல்லி விட்டு Dolo 650 தேவையானால் எடுத்துக் கொள்ளச் சொல்லி விட்டு சென்று விட்டார்.

ஜனவரி 7,8,9 தேதிகளில் சரியான உடல் வலி, குளிர், ஜூரம்.

Dolo 650, Azithromycin 500, Karvol Plus கொண்டு நீராவி பிடிப்பது என ஜலதோஷம் வராமல் , மூச்சுத்திணறல், மூக்கடைப்பு வராமல் பார்த்துக் கொண்டேன்.

என் அம்மா மற்றும் வீட்டு வேலை செய்பவர்களும் சில நாட்களில் இருமத் தொடங்கினார்கள். அவர்களுக்கும் சேர்த்து தான் மாத்திரை வாங்கியிருந்தேன் அதை கொடுக்க ஆரம்பித்தேன்.

2 வாரங்களுக்கு உடல் வலி இருந்தது.
இப்போது அம்மா, வீட்டில் வேலை செய்பவர் என அனைவரும் நலம்.நானும் கொரோனா தொற்றிலிருந்து முழுமையாக விடுபட்டிருக்கிறேன். இறைவனுக்கு நன்றி. நலம் விசாரித்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.