
ரேஷன் கடை (ஷாப்பிங்) அனுபவம்…சிந்தாம ஊத்துடா…
ரேஷன் கார்டு இந்த வருட ஆரம்பத்தில் விண்ணப்பித்து April இரண்டாவது கொரோனா அலையின் போது Verification க்கு கூப்பிட்டார்கள். கொஞ்சம் பணமும் எதிர்பார்த்தார்கள். எல்லா ரோடுகளையும் Barricades வைத்து block செய்திருக்கும் போது நாம் எங்கிருந்து செல்வது? அது அப்படியே Reject ஆகி விட்டது.
பிறகு திரும்ப விண்ணப்பம் செய்து ஒரு மாதத்திற்கு முன் Chamiers Road அலுவலகத்தில் வந்து வாங்கிக் கொள்ள சொன்னார்கள். அதை வாங்கி வந்து இன்று தான் ரேஷன் கடைக்கு செல்ல முடிந்தது.
சிறு வயதில் ரேஷன் கடைக்கு சென்றிருந்தாலும் பல வருடங்களுக்கு பிறகு ரேஷன் கடைக்கு செல்வது ஒரு வித்தியாசமான அனுபவம். ரேஷன் கடைக்கு சென்று ஷாப்பிங் செய்த ஒரே ஆள் நானாக நான் இருப்பேன் என்று நினைக்கிறேன்.
டீத்தூள், காராமணி, கொண்டைக்கடலை, பொட்டுக்கடலை பனை வெல்லம் போன்றவை கண்ணில் பட்டது.
பச்சரிசி, புழுங்கல் அரிசி, துவரம் பருப்பு, பாமாயில்(வீட்டில் வேலை செய்பவருக்கு கொடுக்க) கொடுத்தார்கள். கோதுமை வேண்டாம் என்று சொல்லி விட்டு அரசு Salt(₹10/kg), ஊட்டி டீ(₹22), காராமணி 100 கிராம், பொட்டுக்கடலை வாங்கி கொண்டேன்.
ரேசன் அரிசி சமைக்க ஒரு ஆவல் வந்து விரைவாக வீட்டிற்கு வந்து பச்சரிசியை எடுத்து கழுவி குக்கரில் வைத்து மூடி 6 விசில் வைத்து எடுத்தால் நன்றாகவே வெந்திருந்தது.
அந்த அரிசியுடன் மதிய உணவு சுவையாகவே இருந்தது. இது வரை ரேசன் அரிசி பற்றி அறிந்த அளவுக்கு மோசமில்லை.
பொங்கலுக்கு என்ன சிறப்பு தொகுப்பு தரப்போகிறார்கள் என்ற ஆவலும் அதிகமாகிறது.
#சிவஷங்கர்ஜெகதீசன்
#SivashankarJagadeesan