ராகி லட்டு
பல வருடங்களுக்கு பிறகு ஒரு இனிப்பு(ராகி லட்டு) செய்கிறேன். லட்டை உருண்டையாக பிடிப்பது சிரமமாக இருக்கிறது. கொஞ்சம் நெய் கையில் பரப்பி பிறகு கலந்து வைத்த மாவை உருட்டினேன். இப்போது கொஞ்சம் எளிமையாக திரட்டி உருண்டையாக்க முடிந்தது.
ராகி லட்டுராகி(கேழ்வரகு) லட்டு செய்ய இரண்டு நாட்களாய் நினைத்துக் கொண்டிருந்தேன். ஏலக்காய், முந்திரி bigbasket இல் இருந்து வரும் வரை ஒரு காத்திருப்பு. இதற்கு நடுவே Project Calls.
ராகி மாவை கடாயில் வறுத்து எடுத்து வேர்க்கடலை , ஏலக்காய், முந்திரி குருணையாக மிக்ஸியில் அரைத்துக் மாவில் கலந்து கொண்டேன். அதைத் தவிர நெய்யில் முந்திரி வறுத்து பொன்னிறமாக வெந்ததும் மாவில் சேர்த்துக் கிளறி எடுத்துக் கொண்டு வெல்லப்பாகு காய்ச்சி அதையும் மாவுடன் சேர்த்துக் கொண்டு டைனிங் டேபிள் வந்து உருண்டையாக உருட்ட ஆரம்பித்தேன்.
இந்த முயற்சியில் கஷ்டமாக இருந்தது உருண்டையாக உருட்டுவது தான். நிறைய உருண்டைகள் உருட்டுவது கொஞ்சம் பொறுமையை சோதித்தது. பிறகு உருண்டை பிரிந்து விடாமல் இருக்க Fridge இல் வைத்து எடுத்தேன்.
பல வருடங்களுக்கு பிறகு ஒரு இனிப்பு செய்தாலும் நல்ல பதத்தில் 1 மணி நேரத்தில் முடிக்க முடிந்தது. இனி ஆரோக்கியமான இனிப்பு, காரங்களை வீட்டிலேயே செய்து விட முயற்சிக்கிறேன்.
#சிவஷங்கர்ஜெகதீசன்
#SivashankarJagadeesan
