
ஐந்து உணர்வுகள் – திரையனுபவம்
விடாத அடைமழைக்கு நடுவே #ஐந்துஉணர்வுகள் திரைப்படம் நம் குழுவினரோடு பார்த்த அனுபவம் அட்டகாசமானது.
இயக்குநர் ஞான ராஜசேகரன் அவர்கள் Inox National, விருகம்பாக்கத்தில் மாலைக் காட்சி கண்டிப்பாக இருக்கும் என ஒரு வாரத்திற்கு முன் கூறியிருந்தார்.
நம் Books and Readers – தமிழ், Films and fans குழுவினரோடு ஒன்றாக படம் பார்க்க திட்டமிட்டு சென்னையிலிருக்கும் 20, 30 பேர் வரலாம் என ஒவ்வொருவராய் தொடர்பு கொள்ள ஆரம்பித்தேன்.
1. Jayaraj Subramaniam அவர்கள்,
2. பன்னீர்செல்வம் R அவர்கள்,
3. Manikandan N ,
4. தேனி முத்து பிரசாத் ,
5. தோழர் பகத் சிங் கண்ணன் அவர்கள்
6. Ram Arunachalam அவர்கள்,
7. Manohar அவர்கள்,
8. Sathish Natarajan,
9. சங்கர் சந்துரு மற்றும்
10. Pon Puvaneswaran அவர்கள்
என சரியாக 10 பேர் வருவதாக சம்மதம் தெரிவித்தனர். 10 டிக்கெட் புக் செய்து மாலை 5:30 மணிக்கு குழுவினரை Inox National இருக்கும் Chandra Mall க்கு வரச் சொல்லி நம் குழுவின் கலந்துரையாடலும் திட்டமிட்டிருந்தேன். மழை காரணமாக அனைவராலும் உடனே வரமுடியவில்லை.
தேனி முத்து பிரசாத், தோழர் பக்த் சிங் கண்ணன் அவர்கள் இருவரும் நான் சென்றடைந்த 5 நிமிடத்தில் அங்கே முதலில் வந்து விட்டனர். குழுவினர் ஒவ்வொருவராய் விடாத மழையை தாண்டி வர ஆரம்பித்தனர். அட்டகாசமான உரையாடல் 1 மணி நேரம் போக திரைப்படக்குழுவினரும் வர ஆரம்பித்தார்கள்.
இயக்குநர் Gnana Rajasekaran அவர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர் CJ Rajkumar அவர்கள் எங்களுடன் மிகுந்த அன்புடன் பேசினார்கள்.
எழுத்தாளர் சூடாமணி அவர்களின் 5 கதைகள் படமாக்கப்பட்டிருந்தது. ஐந்து கதைகளும் 1975-1985 காலக்கட்டத்தில் நடக்கும் கதைகள் என அறிமுகப்படுத்தப்பட்டது.
1. இரண்டின் இடையில்
2. அம்மா பிடிவாதக்காரி
3. பதில் பிறகு வரும்
4. தனிமைத் தளிர்
5. களங்கம் இல்லை
1. விடலைப் பருவம்
வரலாறு பாடத்தில் 35 மார்க் எடுத்து Just Pass ஆகும் தன் மகன் தினகரை பற்றிய கவலையில் டியுஷன் வைக்க முடிவேடுக்கிறார் தாய்(Shylaja Chentlur). விடலைப் பருவத்தில் டீயுஷன் டீச்சர் மேல் ஏற்படும் காதல்…டீயுஷன் டீச்சருக்கு திருமணமாகியிருக்கிறது எனத் தெரிந்ததும் .. அடுத்த நொடியே ஆத்திரத்தில்/பொறாமையில் அந்தக் கணவரின் காலில் டம்ப்ளரை போட்டு விட்டு ஓடிவிடும் தினகர் என கதை போகிறது.
2. அம்மா பிடிவாதக்காரி
சிறிய வீட்டில் இரண்டு ரூம்களின் இடையே சுவரிருந்தாலும் அடுத்த ரூமில் நடப்பதை தாயால் கேட்க முடிகிறது. தாயுடன் சுவரிருந்தாலும் மகனால் உரையாட முடிகிறது. இதை முதலிலேயே இயக்குநர் தெளிவாக காட்சிப்படுத்தி விடுகிறார்.
விதவைத்தாயின் முன் புதிதாக திருமணமான மகன், மனைவியோடு இங்கிதமில்லாமல் சரசமாடுவதால் ஏற்படுகிற சங்கடத்தையும் அதைத் தொடர்ந்து தாய் கௌரவமாக “Working women’s hostel” க்கு Shift ஆகி விடுவதாக கதை போகிறது.
Sriranjani விதவைத்தாயாக சிறப்பாக நடித்திருக்கிறார். மகனிடம் எதுவும் கடைசி வரை காட்டிக் கொள்ளாமல் கௌரவமாக எடுக்கும் முடிவு அருமை.
3. பதில் பிறகு வரும்
வரதட்சணை தர இயலாததால், ஒரு பெண்ணை நாயகனின் பெற்றோர் நிராகரிக்க அதே பெண்ணை 15 வருடங்களுக்கு பிறகு பார்க்க நேர்கிறது. இப்போது நாயகனுக்கு இரண்டு குழந்தைகள், மனைவி இறந்து விடுகிறார்.
அந்தப் பெண்(Sujitha Dhanush) திருமணமாகாமல் மேனேஜராக வங்கியில் பணிபுரிகிறார்.
நாயகன் நாயகிக்கு திருமணமாகவில்லை என அறிந்து கொண்டு தன்னை இரண்டாவது திருமணம் செய்து கொள்ள சம்மதம் கேட்க நாயகி தன் வீட்டிற்கு முறைப்படி அழைத்து அங்கே பிறகு வரும் பதில்கள் திருப்புமுனை.
நாயகன் 15 வருடங்களுக்கு முன்பு பெற்றோர் சொன்ன அதே பதிலை திரும்பச் சொல்லி வெளியேறுகிறான்.
4. தனிமைத் தளிர்
தாம்பத்ய வாழ்க்கைக்கு இடையூறாக இருக்கும் குழந்தையை தன் பெற்றோரிடம் வாழ விட்டு விடுகிற தம்பதி. பெற்றோரின் பாசத்துக்காக ஏங்கும் குழந்தை பள்ளியில் அவமானத்துக்கு ஆளாகிறது.
பாட்டி – தாத்தா ஆறுதலாய் குழந்தையை தேற்றி வளர்க்கிறார்கள். ஒவ்வொரு வருடமும் leave இல் குழந்தை பெற்றோரிடம் அனுப்பினாலும் கடிந்து கொள்ளும் தாய்-தந்தையரிடம் குழந்தைக்கு வெறுப்பே மிஞ்சுகிறது.
பாசத்தை கொட்டி வளர்க்கும் பாட்டி – தாத்தாவே வளர்ந்த பெண்ணின் உள்ளத்தை கவர்கிறார்கள்.
பாட்டி(சத்யப்பிரியா) – தாத்தா வாக நடித்தவர்கள் மற்றும் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்கள்.
5. களங்கம் இல்லை
பாலியல் வன்கொடுமைக்கு பலியான பெண் தனியாக வாழ முடிவெடுத்து ஒரு வீட்டின் சிறிய போர்ஷனில் குடியேறுகிறாள். இங்கும் வீட்டு ஓனர் (சாந்தி வில்லியம்ஸ்) மற்றும் புதிய அலுவலகத்தில்லுள்ளவர்கள் அவரை தவறான கண்ணோட்டத்தில் பார்த்து அவதூறு பரப்புகிறார்கள்.
தனியாக வாழும் பெண் தன் வீட்டு ஓனர் குடும்பத்தினரிடம் நாளடைவில் நற்பெயர் சம்பாதித்து, தன்னை இந்த நிலைக்கு ஆளாக்கியவனை சரியான நேரத்தில் சமூகத்திற்கு அடையாளங்காட்டுகிறார் நாயகி.
ஐந்து கதைகளின் திரைக்கதை, ஒளிப்பதிவு, காட்சியமைப்பு, பிண்ணனி இசை, வசனங்கள் இயக்கம் நிறைவாக இருந்தது. ஒளிப்பதிவாளர் CJ Rajkumar ஒளிப்பதிவில் காட்சியமைப்புகள் நேர்த்தியாக இருந்தது. ஒளிப்பதிவு இலக்கணத்திற்கு மாறாமல் இருந்தது.
“அம்மா பிடிவாதக்காரி”, “பதில் பிறகு வரும்”, “தனிமைத் தளிர்” கதைகளில் நடித்த Sriranjani, Sujitha Dhanush , சத்யப்பிரியா மற்றும் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்கள்.
உணர்வுக்குவியலாய் படத்தை தொகுத்திருந்தார்கள்.
ஒரு நல்ல Feel Good அனுபவத்தை 5 கதைகளுமே கொடுத்தது.
பொறுமையாக படித்ததற்கு நன்றி.
#ஐந்துஉணர்வுகள்
#AindhuUnarvugal
#இயக்குநர் #ஞானராஜசேகரன்
#Director #GnanaRajasekaran
#Cinematographer #CJRajkumar
#சிவஷங்கர்ஜெகதீசன்
#SivashankarJagadeeesan