கன மழை
நேற்று இரவு முழுக்க தொடர் மழை பெய்து சாலைகளே தெரியாத அளவுக்கு மழை நீர் சென்னையில் தேங்கியுள்ளது.
2015 க்கு பிறகு ஒரே நாளில் 20 செ.மீ மழை பெய்துள்ளது.
வலி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்னும் 3 நாட்களுக்கு மழை தொடரும் என்றும் சென்னைக்கு ரெட் அலர்ட் கொடுக்கிறார்கள். அடுத்த 3 நாட்களுக்கு பாதுக்காப்பாக வீட்டிலிருப்பதே சிறந்தது.
இப்படி தொடர்மழையாக 4-5 மணி நேரம் பெய்வதே மக்களை வீட்டைக் கட்டிப்போட்டு விடும். இந்த மழை தொடர்ச்சியாக 20 மணி நேரம் பெய்கிறது. 3 மணிக்கு எழுந்தாலும் மழை, 4 மணிக்கும் மழை, காலை 9 மணிக்கும் மழை.
இந்த தொடர்மழை நாம் எந்த செயல் செய்வதற்கும் அவகாசமே கொடுக்க கொடுப்பதில்லை.
சென்னையில் கனமழை பெய்தால் நாம் வைத்திருக்கும் கார், டூவிலர்களுக்கு கண்டம். தண்ணீர் தேங்குவதால் பெரிய இம்சை. டூவிலர், காரை நம்பி எடுத்தால் ஓட்டிக் கொண்டிருக்கும் போதே வண்டி பாதி வழியில் நின்று விடுகிறது.
ஓடாத வண்டியை இரண்டடி தண்ணீரில் தள்ளிக் கொண்டு போபவர்களை கவனித்திருக்கிறேன். அது ஒரு கொடுமை.
குறிப்பாக இந்த வருடம் எல்லா மாதங்களிலும் மழை பெய்து நம்மை நகர விடவேயில்லை.
