
சிந்தனை விருந்தகம் – சரவணன் தங்கப்பா
சரவணனுடைய “சிந்தனை விருந்தகத்துக்கு” நேற்று சென்றிருந்தேன்.
அண்ணா சாலையில் புத்தக நிலையம் உருவாக்குவது சவாலான செலவு மிகுந்த ஒன்று. அதை கனவாக கொண்டு அங்கே புத்தக நிலையம் ஆரம்பித்து சிறப்பாக நடத்தி வருகிறார்.
DMS அருகே உள்ள இந்த புத்தகக் கடையில் பல்வேறுப்பட்ட எழுத்தாளர்களின் புத்தகங்களும் நிறைந்திருக்கின்றன.
சூழலியல், கவிதைகள், சிறுகதைத் தொகுப்புகள், நாவல்கள், ஆய்வுக்கட்டுரைகள், பயணக்கட்டுரைகள், அரசியல் தலைவர்களின் புத்தகங்கள் என பல்வேறு தலைப்புகளில் புத்தகங்களை வாங்கலாம்.
சரவணன் மேலும் பல விஷயங்களை பேரலலாக முன்னெடுத்து செய்கிறார். அவை அனைத்திற்கும் என் வாழ்த்துகள்.