
விருகம்பாக்கம் தொகுதி – மயில்சாமி
யாருக்கு வாக்களிப்பது என முடிவுசெய்யவில்லை.
சற்று முன் நடிகர் மயில்சாமி வந்து ஓட்டு கேட்டார். எந்தவித பந்தாவும் இல்லாமல் மிகவும் பொறுமையாக ஒவ்வொரு வீடாக சென்று கைகூப்பி வாக்கு சேகரிக்கிறார் நடிகர் மயில்சாமி(சுயேச்சை).
திமுக இளைஞர் அணி வீடு தேடி வந்தாலும் Candidate வீட்டிற்கு வந்து ஓட்டு கேட்டது இவர் மட்டும் தான்.
விருகை ரவி (அதிமுக), பிரபாகர் ராஜா(திமுக) காளியம்மன் கோவில் தெரு பிரச்சார கூட்டங்களில் பார்க்க முடிகிறது. தெருவிலெல்லாம் இந்த ஹை ப்ரொஃபைல் வேட்பாளர்களை பார்க்க முடிவதில்லை.
பார்த்தசாரதி(தேமுதிக) , சிநேகனெல்லாம்(மநீம) இந்த பக்கமே காணவில்லை. இவர்கள் அனைவரையும் விட பேசாமல் மயில்சாமிக்கே வாக்களித்து விடலாமா எனத் தோன்றுகிறது.
#விருகம்பாக்கம் #மயில்சாமி #virugambakkam #mayilsamy #TNElections2021