வாசிப்பனுபவம் 5: அவசரம்: உடனடியாகச் செய்தாக வேண்டிய சமூக பொருளாதார மாற்றங்கள் – சோம. வள்ளியப்பன்

அவசரம்: உடனடியாகச் செய்தாக வேண்டிய சமூக பொருளாதார மாற்றங்கள் – சோம. வள்ளியப்பன்

வாசிப்பனுபவம் 5: அவசரம்: உடனடியாகச் செய்தாக வேண்டிய சமூக பொருளாதார மாற்றங்கள் – சோம. வள்ளியப்பன்

அவசரம்: உடனடியாகச் செய்தாக வேண்டிய சமூக பொருளாதார மாற்றங்கள்

ஆசிரியர்: சோம. வள்ளியப்பன்
பக்கங்கள்: 152
விலை : 175
வகை : ஆய்வுக் கட்டுரைகள்
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம்

கவனமில்லாமல் நாம் செய்து பழகி விட்ட செயல்கள் நம் சுற்றுச்சூழலை எப்படி பாதிக்கிறது? நம் வாழ்வில் கலந்து விட்ட ப்ளாஸ்டிக் எப்படி நம் சுற்றுச்சூழலை கெடுத்து வைத்திருக்கிறதது, ஆளிள்ளா விவசாயம், செயற்கை நுண்ணறிவு(Artificial Intelligence) அதனால் வரப்போகும் ஆபத்துகள், வேலை இழப்புகள், இயந்திரமயமாக்கலின் சிக்கல்கள்,
மாறிக் கொண்டிருக்கும் ” Factors of Production”,

ஜிடிபியில் மற்றும் நாடுகள் கவனம் செலுத்துவது சரியா?

அதிகரித்து கொண்டேயிருக்கும் “வருமான வேறுபாடு”(Income Inequality” ) சரியா? டாலர் பில்லியனர்கள் அதிகரிப்பதால் வரும் தீமைகள்

என பல விஷயங்களை தெளிவாக தொகுத்து அளித்திருக்கிறார் ஆசிரியர் சோம. வள்ளியப்பன்.


1. பிளாஸ்டிக் பயன்பாடு
2. அதீத பொருட்கள் பயன்பாடு
3. அதீத இயந்திரமயமாக்குதல்
4. சில நிறுவனங்கள் மிகமிகப் பெரு நிறுவனங்கள் ஆவது
5. சிலர் மிகப்பெரும் பணக்காரர்கள் ஆவது

இவற்றை ஐம்பெரும் ஆபத்துகளாக குறிப்பிடுகிறார்.

வறியவர்கள் மேலும் வறியவர்கள் ஆகிக் கொண்டே போவது சரியா?

கண்டுபிடிப்புகள், அறிவியல் தொழில்நுட்பம், உற்பத்தி திறன், உழைப்பு ஆகியவற்றால் கிடைத்திருக்கும் பலன்களில் எவ்வளவு சதவீதம் ஒரு சிலருக்கு மட்டுமே போகிறது? எல்லோரும் அவரவர் அளவில் வளர்ச்சியடைந்திருக்கிறார்களா? ஒப்பீட்டு அளவில் சமமான வளர்ச்சியடைந்திருக்கிறார்களா?

நாட்டின் பொருளாதாரம் வளர்ந்திருக்கும் அளவு எல்லோரும் வளர்ச்சி பெற்றிருக்கிறார்களா? Absolute growth, Commensurate growth, Proportionate growth, Fair growth போன்றவை இப்போது உலகில் இருக்கின்றனவா?

/Balanced regional growth போல‌ எல்லா மக்களும் சம அளவு வளர்ச்சி பெறுகிறார்களா என்று பார்க்கக் கூடிய Balanced People growth வந்திருக்கிறதா? /❤️👏🏻💐

என பல ஆழமான கேள்விகளும் முன் வைத்து அட்டகாசமாக எழுதியிருக்கிறார்.

/GDP என்பது நாட்டின் உற்பத்தியை மட்டுமே காட்டுவது, மக்களின் பொருளாதார வளர்ச்சியை காட்டுவதல்ல./ ❤️👏🏻💐

GDP உயர்ந்தாலும். வளர்ச்சி பெறாத மக்கள் பலர் தொடர்ந்து அப்படியே வறுமையில் வாட்ச் போகும் ஆபத்து தொடரத் தான் போகிறது என பல தரவுகள் மூலம் முன்வைக்கிறார்.

மக்களின் ஆடம்பர வாழ்க்கை முறைகளாகும், சோம்பல் காரணமாக செய்யாமல் விட்டுக் கொண்டிருபாபதாலும் எதிர்கால உலகம் கேள்விக்குறியாகாகப்பட்டுக் கொண்டிருக்கிறது.‌
மாசுபடும் பூமி, வானம், காற்று, நீர் என அனைத்தும் வருங்கால சந்தியினரை மிக அதிகமாக பாதிக்கப் போகிறது.
இந்த தலைமுறையினர்‌ நினைத்தால், மாறினால் அவர்களது செயல்பாடுகளை மாற்றினால் மீதமிருக்கும் எதிர்காலத்தவர் நலன்களைப் பாதுகாக்க முடியும். ❤️👏🏻💐

புத்தகத்தின் கிடைசியில் ஓர் புதிய ஆத்திச்சூடி எழுதியிருக்கிறார்.


ஆசிரியரின் பொருளாதாரம் சார்ந்த புத்தகங்களும், மக்கள் நலம் சார்ந்த தகவல்களும் பயனுள்ளவை.‌இந்த புத்தகம் சூழலியல் சார்ந்த செய்ய வேண்டிய பொருளாதார மாற்றங்களை மிக அழகாக தொகுத்தளிக்கிறது.

இந்த புத்தகத்தில் இருக்கும் தரவுகள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய தரவுகள். ஒருசேர பொருளாதாரம், சுற்றுச்சூழல் மாசடைய நாம் தினமும் வீணாக்கிக் கொண்டிருக்கும் குப்பைகளின் அளவுகள் என பல தரவுகள் மிக முக்கியமானவை.Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.