வாசிப்பனுபவம் 4: வேறென்ன வேண்டும் களவு போக – தீபிகா சுரேஷ்
வேறென்ன வேண்டும் களவு போக
ஆசிரியர்: தீபிகா சுரேஷ்
பக்கங்கள்: 80
விலை : 170
வகை : கவிதைகள்
பதிப்பகம்: எழிலினி
ஆசிரியரின் இரண்டாவது கவிதைத் தொகுப்பு.
காதல், மழை, காஃபி, தேநீர், முத்தம், ஆசை, அன்பு, சிநேகம், மூச்சுக்காற்று, உடல் மொழி, காதலும் மழையும், காலை நேர மழை, மாலை நேர மழை, மழை இரவு, காதல் போதை, காதல் யுத்தம், மழை தரும் மயக்கம்
என காதலைப் பற்றி மழை வார்த்தைகளில் எழுதி நம்மையும் நனைய வைத்திருக்கிறார் தீபிகா.
//தோல்வியும் அலுப்பிலும் உழன்று
சோர்வை பூசி
வீடு திரும்பும் நேரம்
சட்டென அணைத்து
உலகை மறக்கச் செய்யும்
இந்த மாலை நேர மழைக்கு
நீ தரும் நெற்றி முத்தத்தின் இதம்//
❤️👏🏻💐
//மழை கொண்ட நாளெல்லாம்
உன்னைக் கண்ட நாள் போல்
மயிலிறகாய் மனம்
வாரி இறைக்கும் உன் முத்தங்கள்
போல் நீட்டிய கைகளில்
நிறைந்தொழுகும் மழை
பார்வைக்கே பற்றிக் கொள்வதைப்
போல் சாரல்தானென்றாலும்
அடைமழையாகிறேன் நான்
அள்ளித்தரும் புத்துணர்வில்
பொங்கி வரும் பூரிப்பில் மழையே
வெல்லும் எப்போதும்
மழை தரும் மயக்கம் போல்
வேறேதும் மாயம் உண்டோ
உனைத் தவிர உலகில்//
❤️👏🏻💐
//எனை இசைக்கும் இல்லை இயக்கும்
உன் மூச்சுக்காற்றில்லாமல் ஏகாந்தம் வாசிக்கிறேன்
உறைந்து கிடக்கும் என்னுள் புகுந்து
வெளிச்செல்லும் காற்று
பெருமூச்சாய் மட்டுமே
உள்ளடக்கிய உணர்வுகளோடு
ஊமையாய் உண்மையில்
இசைக்க மறந்த நான்
வெறும் மூங்கில் தானே
புல்லாங்குழலே என்றாலும்
நீ வாசித்தால் தான்
நான் சுவாசிப்பேன்
என்பதை மறந்தாயோ
துளைகளிலெல்லாம் துக்கம் தேங்கிக் கிடக்க
காற்றை பகைத்து காத்திருக்கிறேன்
நீ வரும் வழி பார்த்து//
அட்டகாசம் ❤️👏🏻💐
இதயங்கள் நிறைந்த டெம்பளேட்டுடன் ஒவ்வொரு பக்கங்களிலும் காதல் ரசம் மழையாய் கொட்டுகிறது.
தீபிகா சுரேஷ் இன்னும் பல கவிதைத் தொகுப்புகளை எழுத வாழ்த்துகள்.
