
44th சென்னை புத்தக கண்காட்சி – இரண்டாம் முறை
சென்னை புத்தக கண்காட்சிக்கு நேற்று இரண்டாம் முறை சென்றபோது வாங்கிய புத்தகங்கள் 16.
இலவசமாக வந்த புத்தகங்கள் – 2 (நன்றி சரவணன் தங்கப்பா & திருச்சிராப்பள்ளி ப.மாதேவன்). என மொத்தமாக 18.
இந்த புத்தகங்கள் அனைத்தும் வளரும் எழுத்தாளர்கள், புதியவர்கள் எழுதிய எழுத்துக்கள். இந்த எழுத்தாளர்களின் சிறுகதைகள், நாவல்கள், கவிதைகள், கட்டுரைகள் படிக்கும் போது
நண்பர் வாசு முருகவேல் அவர்களுடைய “புத்திரன்” நாவல் வெளியீட்டிற்கு போக்குவரத்து நெரிசலில் மாட்டிக் கொண்டதால் சரியான நேரத்திற்கு செல்ல முடியவில்லை. ஆனால் அதன் பிறகு அவரை சந்தித்து பேச முடிந்தது.
#உயிர்மை அரங்கில் கவிஞர் மனுஷ்யபுத்திரன் மற்றும் தமிழினி அரங்கில் அ. முத்துகிருஷ்ணன் அவர்களை சந்தித்து பேச முடிந்தது.
அ.முத்துகிருஷ்ணன் அவருடைய மாயவலை மற்றும் உலகம் நமக்காக புத்தகங்களை கையெழுத்திட்டு கொடுத்தார். ராம்ஜி நரசிம்மன் அவருடைய ‘அல்லிக்கேணி’ புத்தகத்தை ப்ரியமுடன் கையெழுத்திட்டு கொடுத்தார்.
#ZeroDegreePublishing ( அரங்கு எண் : 10-11)
1. புத்திரன் – வாசு முருகுவேல்
2. அல்லிக்கேணி – ராம்ஜி நரசிம்மன்
3. அத்தாரோ – சரவணன் சந்திரன்
4. நானும் என் பூனைக்குட்டிகளும் – தரணி ராஜேந்திரன்
#தமிழினி (அரங்கு எண் : 156-157)
5. மாயவலை – முத்துகிருஷ்ணன்
6. உலகம் நமக்காக – முத்துகிருஷ்ணன்
#உயிர்மைபதிப்பகம் (அரங்கு எண் – F26)
7. வாதையின் கதை – மனுஷ்யபுத்திரன்
8. பஷீரிஸ்ட் – கீரனூர் ஜாகிர் ராஜா
#சிந்தனைவிருந்தகம் (அரங்கு எண் : 278)
9. 80களின் காலம் – சரவணன் தங்கப்பா
பாவாணந்தம் வெளியீட்டகம்
தேவநேய பாவாணர் அரங்கம் (அரங்கு எண் : 88)
10. முற்றாத் காதல் – திருச்சிராப்பள்ளி ப.மாதேவன்
கோதை பதிப்பகம் -படைப்பு (அரங்கு எண் – 161)
11. நான் உன்னுடைய துறவி – தி. கலையரசி
12. நிழலின் வெளிச்சம் – கடையநல்லூர் பென்சி
தமிழ் தேசிய தமிழர் கண்ணோட்டம்- பன்மை வெளி பதிப்பகம் ( அரங்கு எண் :83)
13. கல்விச் சிக்கல்கள் தீர்வை நோக்கி- சு. உமா மகேசுவரி
14. கொரோனாவுக்கு பின் மாற்றுப்பாதை – கி. வெங்கட்ராமன்
#வாசகசாலை (அரங்கு எண் : 255)
15. ஒடலு – சாரா(Zabinath K)
16. கார்மலி – மித்ரா அழகுவேல்
17. வலசை – கொற்கை அஜீடின்
#அடையாளம் (அரங்கு எண் 86-87)
18. தமிழர் பண்பாடு வரலாறு இன வரலாறு- பக்தவத்சல பாரதி
#சென்னைபுத்தககண்காட்சி #TamilLiterature #CBF2021 #ChennaiBookFair2021 #44chennaibookfair