
44th சென்னை புத்தகக் கண்காட்சி – முதல் முறை
சென்னை புத்தக கண்காட்சியில்
வாங்கிய புத்தகங்கள் 15. இலவசமாக வந்தவை – 2
தொ.பரமசிவன் மற்றும் நம்மாழ்வார் புத்தகங்கள் வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். மற்ற எதிர்பார்ப்புகள், ப்ளான்/லிஸ்ட் ஏதும் இன்றி புத்தகங்களை வாங்கினேன்.
காலச்சுவடு முனைவர் #தொ.பரமசிவன் அவர்களின் 5 புத்தகங்களை தொகுப்பாக ₹240 க்கு கொடுக்கிறது. இந்த 5 புத்தகங்களுமே வாசகர்கள் கண்டிப்பாக வாங்கி படிக்க வேண்டிய புத்தகங்கள்.
1. அறியப்படாத தமிழகம்
2. தெய்வம் என்பதோர்
3. நீராட்டும் ஆறாட்டும்
4. தொ.பரமசிவன் நேர்காணல்கள்
5. இதுவே சனநாயகம்
#காலச்சுவடு – அரங்கு எண் : F29
சிஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸில்( அரங்கு எண்: F27)
6. “சமயங்களின் அரசியல்” – தொ.பரமசிவன் புத்தகம் வாங்கினேன்.
7. மாதொருபாகன் – பெருமாள்முருகன்
8. ஊட்டி வரை உளறு – எழுத்தாளர் பாலகணேஷ் & நந்தகுமார்(நந்து சுந்து) – டிஸ்கவரி புக் பேலஸ். அரங்கு எண் – F19
5 புத்தகங்கள் #பூவுலகின்நண்பர்கள் அரங்கில் (அரங்கு எண்: 344) வாங்கினேன். சுந்தர்ராஜன் அவர்கள் சில புத்தகங்களை பரிந்துரைத்ததோடு எடுத்துக் கொடுத்தார். அவருக்கு என் நன்றிகள்.
9. பூமித்தாயே – நம்மாழ்வார்
10. நம்மாழ்வார்:ஆயிரங்காலத்துப்பயிர்
11. புவிவெப்பமடைதலும் காலநிலை பிறழ்வும் – பூவுலகின் நண்பர்கள்
12. வெள்ளம் தந்த பாடங்கள் – பூவுலகின் நண்பர்கள்
13 கதவைத் திறங்கள் அவை உள்ளே வரட்டும் – ஜுயோ டாமின்
சாகித்ய அகாடமி அரங்கில் வாங்கியவை.
14. தெய்வத்தின் கண் – என்.பி.முகமது- தமிழில் : தோப்பில் முகம்மது மீரான்
15. ராவி நதியில் – Gulzar- தமிழில்: சிவசங்கரி
மழைக்கு ஒதுங்குவது போல் ஒரு அரங்கில் ஒதுங்கினேன். அது ராம்ராஜ் நிறுவனத்தாரின் அரங்கம். ஒரு புத்தகமும், வெண்மை இதழும் இலவசமாக இன்முகத்துடன் கொடுத்தார்கள். அவர்களுக்கு என் நன்றிகள்.
16. சங்கச்செவ்வி – முனைவர். சுந்தர ஆவுடையப்பன்
வெண்மை இதழ் – மகாத்மா காந்தி சிறப்பிதழ்
#சென்னைபுத்தககண்காட்சி #TamilLiterature #CBF2021 #ChennaiBookFair2021 #44chennaibookfair
.