
வாசிப்பனுபவம் 2: இறக்கை முளைத்த என் வீட்டுப் பூனைக்குட்டி – அருணந்தி சிவம்
இறக்கை முளைத்த என் வீட்டுப் பூனைக்குட்டி
ஆசிரியர்: அருணந்தி சிவம்
பக்கங்கள்: 74
விலை : 100
பதிப்பகம்: புகவு
ஆசிரியரின் நான்காவது கவிதைத் தொகுப்பு.
மரம்,நிழல், சருகுகள், மரணம், உறக்கம், இரவு, நதி, நீர், கனவுகள், பூனைக்குட்டி, தனிமை, கடற்கரை, களவு, தவிப்பு, மாலை, இரவின் பேச்சு, மௌனம் என பல தலைப்புகளில் அட்டகாசமான கவிதைத்தொகுப்பாக எழுதியிருக்கிறார் அருணந்தி சிவம் (ப. தமிழ்ச்செல்வன்).
தவிப்புகள் என்னும் கவிதையில்…இப்படி எழுதுகிறார்..
/காற்றுக்கு ஏங்கி கருதியதாய் முகில்கள்
வெயிலுக்கு அப்பாலும் காய்ந்து கொண்டிருக்கும் நிழல்கள்
வார்த்தைகளை கொன்று வென்றார் மௌனம்
எதனது எதிரொலியாய்
நிறைவேறாத ஏக்கம்
கடலை வடிகட்டி
சாற்றெடுத்ததாய் களைப்பு /
அட்டகாசம் 👍🏻❤️💐
/ இறக்கை முளைத்த என் வீட்டுப் பூனைக்குட்டி
என்னை விண்வெளி வனாந்திரத்தில்
விட்டு விட்டு திரும்பியது
சிதறிக்கொண்டிருந்த துகளின் துளியில்
ஒட்டிக் கொண்டேன்
திண்மத்திலிருந்து கூழ்மம் வரை
பயணம் செல்ல அழைத்தது துகளின் துளி
சூன்யத்தின் ஈர்ப்பால் உடன் சென்றேன்
உயிர்களின் வாசமற்று
வெய்யிலும் பனியும் மாறிமாறி
வெடித்துக் கொண்டும்
சதையை உருக்கி
மழையும் பொழிந்து கொண்டிருந்தது கருந்துளையில்
மீதம் சூன்யத்தின் சுழியில் பதுங்க
இடம் தேடிக் கொண்டது
வனப்பும் களைப்பும்
கிங்கிரையை குடிக்கவே
திரும்பினேன்
வார்த்தைகளற்ற அற்புத உலகிலிருந்து
வார்த்தைகளில் வலியேற்றும் உலகிற்கு. /
விண்வெளியிலியிருந்து பூமிக்கு திரும்பியதை சொல்லும் இடத்தில் வார்த்தைகளற்ற அற்புத உலகிலிருந்து
வார்த்தைகளில் வலியேற்றும் உலகிற்கு என முடிந்திருந்த வார்த்தைகள் மிகவும் அருமை.
ஒவ்வொரு தலைப்பும், வார்த்தை பிரயோகமும் நம்மை அந்த கவிதைக்குள் பயணிக்க வைத்தது ரசிக்கும்படி இருந்தது.
அருணந்தி சிவம் அவர்கள் மேலும் பல கவிதைதொகுப்புகள் வெளியிட வாழ்த்துகள்.