வாசிப்பனுபவம் : லாக்டவுன் ரெசிபிஸ் – ஆதி வெங்கட்
#சஹானாவாசிப்புப்போட்டி
மாலை நேரங்களில் சாப்பிடும் ஸ்நாக்ஸ் வீட்டிலேயே செய்து மகள் , மகன்களுக்கு பரிமாறும் திண்பண்டங்களை எளிய செய்முறை விளக்கம் மூலம் விளக்கியிருக்கிறார் ஆதி வெங்கட்.
மாலை நேரத்தில் ஸ்நாக்ஸ் வைத்து கொண்டு கொரிப்பது குழுந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பிடித்த விஷயம்.
ஆனால் வெளியிலிருந்து வாங்கும் திண்பண்டங்களில் உள்ள சிக்கல் வீட்டிலுள்ளவர்களுக்கு இந்த ஸ்நாக்ஸ் ஒத்துக் கொள்ளுமா? அந்த திண்பண்டங்கள் எப்போது செய்யப்பட்டது , எந்த எண்ணெயில் பொறிக்கப்பட்டது என நமக்கு எதுவுமே தெரியாதது தான்.
மொத்தம் 26 ரெசிபிஸ் பற்றிய செய்முறை விளக்கங்கள். கீழே ரெசிபிஸை தொகுத்திருக்கிறேன்.
இதில் சிறுதானிய முருங்கை பக்கோடா, உக்காரை, வாழைப்பூ வடை, தவலை வடை, பலாக்கோட்டை கட்லட், கமன் டோக்ளா வீட்டில் செய்து சாபாபிட ஆசை.
1 ஃபரைட் இட்லி,
2 பேல் பூரி,
3 இட்லி மாவு போண்டா,
4 பலாக்கோட்டை கட்லட்,
5 பலாப்பழ அப்பம்,
6 சேனைக்கிழங்கு பால்ஸ்,
7 காரப்பொறி,
8 பேல் பூரி,
9 மசாலா கடலை,
10 ஆலூ டீக்கி,
11 ஸ்வீட் கார்ன் பக்கோடா,
12 சிறுதானிய முருங்கை பக்கோடா,
13 சூரத் கி கமனி,
14 உக்காரை,
15 முள்ளு தேங்குழல்,
16 அவல் கட்லெட்,
17 பால் கொழுக்கட்டை,
18 வாழைப்பூ வடை,
19 உப்பு உருண்டை,
20 அவல் பிடி கொழுக்கட்டை,
21சிறுதானிய பிடிக் கொழுக்கட்டை
22 பூரி லட்டு
23 தவலை வடை
24 நேந்திரம் சிப்ஸ்
25 கமன் டோக்ளா
26 ரவைக் குழிப்பணியாரம்
ஒவ்வொரு ரெசிபி செய்யும் முறை, பதம் அதற்கு ஊறவைப்பது, எந்த மாற்று பொருளை பயன்படுத்தியும் இந்த ரெசிபியை செய்யலாம் என்று தெளிவாக விளக்கியிருக்கிறார் ஆதிவெங்கட்.
ரெசிபி படங்கள் ரசிக்கும்படி உடனே இவற்கறை செய்யும் ஆவலை தூண்டியது.
