தோட்டம் – பராமரிப்பு
பல நாட்களாக தோட்டத்தை பராமரிக்க முடியவில்லை. மழை பெய்வதால் தண்ணீர் ஊற்ற வேண்டியதில்லை என்று நினைப்பது ஒரு காரணம்.
ஆனால் செடிகள் தன்னைத்தானே காத்து பூத்து காய் கொடுத்து கொண்டிருந்தன. கொய்யா மரம் 10 அடிக்கு மேல் வளர்ந்து அதை தொட்டியில் இருந்து பூமியில் மாற்றி நட்டிருக்கிறேன். இன்று வெண்டைக்காய் மற்றும் மிளகாய் பறிக்க முடிந்தது. இன்னும் சில நேரம் செடிகளுடன் செலவிட வேண்டும் என்றே தோன்றுகிறது.
