சிறுகதை 8: ஆல் பாஸ் – சிவஷங்கர் ஜெகதீசன்
ஏதோ ஒரு சக்தி வந்து தன்னைக் காப்பாற்றும் என கடவுளை வேண்டினான் பாபு. கணக்கு பாடம் மட்டும் வரவில்லை பாபுவிற்கு. 6ஆம் வகுப்பு வரை நன்றாகவே மார்க் வாங்குவான்.
அல்ஜீப்ரா, ட்ரிக்ணாமெட்ரி என புதிது புதிதாக வர ஆரம்பித்தவுடன் கணக்கில் ஃபெயில் ஆக ஆரம்பித்தான். அதுவும் இப்போது பத்தாம் வகுப்பில் ரொம்பவே கஷ்டமாக உணர்ந்தான் பாபு.

“அது ஏண்டா மேத்ஸ் ல மட்டும் ஃபெயில் ஆகிர?” என்பான் அருண்.
“தெரியலடா. எக்ஸாம் ஹால்ல போய் உட்கார்ந்தா ஒரு ஃபார்முலா வும் ஞாபகம் வர மாட்டேங்குது”
கணக்காசிரியர் பிரகாஷ் இந்த தடவை பப்ளிக் எக்ஸாமில் நீ பாஸ் ஆவது கஷ்டம் என காலாண்டு விடைத்தாள் கொடுக்கும் போதே சொல்லி விட்டார்.
கஷ்டப்பட்டு அரையாண்டு தேர்வில் பாஸ் மார்க் எடுத்தான் பாபு.
ரிவிஷன் டெஸ்ட்களில் ஃபயிலானான் பாபு.
ஆன்லைன் டியுஷன் கிளாஸ்களில் நடத்தியவை ஒன்றுமே விளங்கவில்லை.
மொட்டை மாடியில் சில ஃபார்முலாக்களை எழுதிப் பார்க்கும் போது அருண் கால் செய்தான்.
“பாபு, எக்ஸாம்ஸ் லாம் கேன்சல் பண்ணிட்டாங்கடா”
“என்னடா சொல்ற?”
“கொரோனா தீவிரமா இருக்கிறதால கவர்மெண்ட் எக்ஸாம்ஸ கேன்சல் பண்ணிட்டாங்கடா.எல்லாரும் டென்த்ல ஆல்-பாஸ். நீ மேத்ஸ் க்ளியர் பண்ணிட்ட”
இனம் புரியாத சந்தோஷத்தில் கொரோனாவிற்கு நன்றி சொன்னான் பாபு.