சிறுகதை 4: வினை – சிவஷங்கர் ஜெகதீசன்
ரேவதி படபடப்புடன் நின்றிருந்தாள்.
“இதோ பாரும்மா…ஏற்கனவே Lockdown ல நீ இங்க வர முடியல… ரெண்டு மாசமா என் வீட்டுக்காரியே எல்லா வீட்டுவேலையும் செய்ய ஆரம்பிச்சுட்டா..இனிமே நீ வர வேண்டாம். வேற வீடு பாத்துக்கோ” என்றான் மகேஷ்.

ரேவதி அழுதுகொண்டே மகேஷின் மனைவி ஜெயாவை பார்த்தாள். ஜெயாவும் ரேவதியை பாவமாக பார்த்துவிட்டு உள்ளே சென்று விட்டாள்.
ரேவதி மீண்டும் தேம்பி தேம்பி அழ ஆரம்பித்தாள். பிறகு வெளியேறினாள்.
சட்டை செய்யாமல் லேப்டாப்பில் மூழ்கினான் மகேஷ். கணினியில் வீட்டிலிருந்தபடியே வேலை செய்து பழகியிருந்தான்.
பாபு இரண்டு முறை அழைத்திருந்தார். அதை மிஸ் செய்ததால், மகேஷ் தானாக பாபுவை அழைத்தான்.
“ஹலோ”
“சார் சொல்லுங்க..போன் பண்ணியிருந்தீங்களா?” என்றான் மகேஷ்.
“ஆமா மகேஷ். An important message.”
“சொல்லுங்க சார்” என்றான் மகேஷ்.
“நம்ம IT sector நிலைமை உனக்கே தெரியும். எதிர்பார்த்த நியு ப்ராஜெக்ட்ஸ் எதுவும் வரல. மூணு ப்ராஜெக்ட் க்ளோஸ் பண்ணியிருக்கோம் ரெண்டு மாசத்துல”.
“ஆமா”
“உங்க ப்ராஜெக்ட்டும் கஸ்டமர் க்ளோஸ் பண்றாங்க. அதனால இந்த மாசம் உங்களையும் Layoff பண்ண சொல்லிருயிருக்காங்க”. என்று சொல்லி விட்டு மகேஷ் பேசுவதை சட்டை செய்யாமல் லேப்டாப்பில் மற்ற வேலைகளில் மூழ்கினார் மேலாளர் பாபு.