மக்களுக்கு அறிவில்லை
அம்மாவிற்கு சர்க்கரை மாத்திரை அருகில் உள்ள மருந்தகங்களில் கிடைக்காததால் ஈக்காட்டுத்தாங்கல் வரை (Office போகும் வழி) சென்று வாங்க வேண்டியிருந்தது.
வழியில் பல பேர் “மாஸ்க்” அணியவில்லை.
“மாஸ்க் போடலயா தம்பி” என்றொரு சிறுவனிடம் கேட்டேன்.
“வீடு பக்கத்துல தான் ணா. அதான்…”என்று சொல்லிவிட்டு விலகிச்செல்ல ஆரம்பித்தான்.
கே.கே நகர் சிவன் பார்க் அருகில் மூன்று பேர் அமர்ந்து அரட்டையடித்துக் கொண்டிருந்தனர். ஒருவர் கூட மாஸ்க் அணியவில்லை.

ஈக்காட்டுத்தாங்கல் மருந்து கடைக்கு அருகிலுள்ள SBI ATM இல் இருந்து ஒருவர் வெளியே வந்தார். Sunglass அணிந்திருந்தார். Mask அணியவில்லை.
படிக்காதவர்கள் என்று நாம் நினைப்பவர்கள் எல்லாம் Kerchief இல் முகத்தை சுற்றியிருந்தார்கள். பூ விற்பவர்கள் துணி மாஸ்க் அணிந்திருந்தார்கள்.
படித்த அதிபுத்திசாலிகள் தான் Mask அணியாமல் சுற்றிக் கொண்டிருந்தனர்.
Prasad Studio அருகில் உள்ள “பழமுதிர்சோலை” யில் சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படுகிறது. ஒரே நேரத்தில் 3 பேர் மட்டுமே கடைக்குள் பொருட்கள் வாங்க அனுமதி. மற்றவர்கள் வரிசையில் அவர்கள் முறை வரும் வரை காத்திருக்க வேண்டும்.
ஜாபர்கான் பேட்டை, கே.கே. நகர் வழியாக வந்த போது அங்கிருந்த காய்கறி கடைகளில் நல்ல கூட்டம். சிலர் மாஸ்க் அணிந்திருந்தனர். ஆனால் ஒரு கடையிலும் சமூக இடைவெளி கடைபிடிக்க ப்படவில்லை.
நம்மூருக்கு பொருந்தாத விஷயமாக “சமூக இடைவெளி” , “தனி மனித இடைவெளி” போன்றவைகள் இருக்கின்றன.
மக்களுக்கும் அறிவில்லை. #Covid19