பிரசாதம் – சுந்தர ராமசாமி
30-May இவருடைய பிறந்த நாள் என தெரியாது. ஆனால் சரியாக அவரது சிறுகதையை எடுத்து படித்துக் கொண்டிருக்கிறேன். இது எப்படி Connect ஆகியது எனத்தெரியவில்லை.
ஏற்கனவே எழுத்தாளர் பவா செல்லத்துரை அவர்கள் பல முறை சொல்லி கேட்டிருந்தாலும் இந்தக் கதை படிப்பதற்கும் அட்டகாசமான கதை.

தன் மகளுடைய பிறந்த நாளுக்கு புதிய துணி எடுத்துக் கொடுக்க வேண்டும். அதற்கு ஐந்து ரூபாய் வேண்டும் என கண்டிப்பாக கூறி விடும் மனைவி…எப்படி பணத்தை புரட்டுவது, யாரிடம் கேட்பது, யாராவது சைக்கிளில் விளக்கில் வராமல் மாட்டுவார்களா? என நாள் பூராக தேடும் கான்ஸ்டபிள்.
அந்தி சாயும் வேளையில் அர்ச்சகர் ஒருவர் கண்ணில் படுகிறார். அவர் Postbox இல் சரியாக உள்ளே போகாத லெட்டரை உள்ளே தள்ள முயற்சிக்கும் போது நம் 7347(Constable) இடம் மாட்டி கொள்கிறார்.
எழுபத்து மூன்று நார்ப்பத்தியேழு(7347) என்றே கதை முழுதும் எழுதியிருக்கிறார் சுந்தர ராமசாமி.
எப்படியாவது இந்த அர்ச்சகரிடம் 5 ரூபாய் வாங்கி விட வேண்டும் என 7347 பேசுவதும்..அதற்கு அர்ச்சகர் பிடி கொடுக்காமல் பேசுவதும் என செம யதார்த்தமான கதை ரசிக்கும்படியாக இருந்தது.
ஸ்டேஷனுக்கு அர்ச்சகரை 7347 அழைத்துச் செல்ல…அங்க..எச்.சீ(Head Constable) பொல்லாவருய்யா…இங்கேயே என்னை..கவனிச்சுட்டு போயிடு…என் சொல்ல…புரியாத அர்ச்சகர்…எதா இருந்தாலும் ஸ்டேஷன்லயே பேசிக்கலாம் என இவரை இப்போது அர்ச்சகர் அழைத்துக் கொண்டு போக…ஸ்டேஷன் நெருங்கியதும் இவருடன் இனி பணம் வாங்க முடியாது என வீட்டுக்கு போய்யா எனச்சொல்ல இம்முறையும் அர்ச்சகர் ஸ்டேஷனுக்குள் H.Cஐ பார்க்க பிடிவாதமாக இருக்கிறார்.
முடிவாக ‘கண்ணம்மா’ என்னும் தன் குழந்தையின் பிறந்த நாள் பற்றி 7347 கூற…
இதை கேட்ட அர்ச்சகர்..வேட்டியை லூஸ் செய்து கொண்டு …அதில் முடித்து வைத்திருந்த 5 ரூபாயை 7347 க்கு கொடுக்கிறார்.
“நாளைக்கு கோயிலுக்கு கூட்டிட்டு வாரும் கொழந்தய… கண்ணம்மா வந்தா…ரொம்ப சந்தோஷப்படுவான் நதீக்கிருஷ்ணன். நானே கூடயிருந்து ஜமாயிச்சுபுடறேன்” என்கிறார் அர்ச்சகர்.
7347: “சரி, அப்படியே கூட்டிட்டு வாறேன்”
இப்படி கதை முடிகிறது.