கொரோனா கற்றுக் கொடுத்த 15 விஷயங்கள்
1. இயற்கை தன்னைத்தானே புதுப்பித்துக் கொள்ளும்.
2. மனிதர்களின் உதவி பறவைகளுக்கோ, விலங்குகளுக்கோ, செடிகளுக்கோ தேவையில்லை.
3. என்றுமே கடனில்லாமல் வாழ்வதே சிறந்தது.
4. கடனில்லையென்றால் நிம்மதியாக தூங்க முடிகிறது. 2008 Recession போது கடன் சுமையும் இருந்த போது என்னால் சுத்தமாக தூங்க முடியவில்லை.
5. இந்த அசாதாரண சூழ்நிலைகள் நிலநடுக்கம், நுண்ணுயிரிகளின் மூலம் தாக்குதல் போன்றவை பிற்காலங்களில் அதிகமாகவே இருக்கும் எனத் தோன்றுகிறது. உண்மையான போரை விட Proxy war அதிகமாக இருக்கும்.
6. வல்லரசு நாடாக நினைத்துக் கொண்டிருந்த நாடு உண்மையில் வல்லரசாகவே இல்லை. நாம் தான் அந்நாட்டை பெரிதாக நினைத்துக் கொண்டிருந்தோம்.

7. வேலை பார்க்க பணியிடம் என்ற ஒன்று அவசியமில்லை. வீட்டிலிருந்தபடியே Zoom, WebEx, MS-Teams, Skype மூலம் ஒருவரையொருவர் பார்த்து தகவல் பறிமாறிக் கொள்ளலாம்.
8. அச்சு ஊடகங்களின் தேவை வெகுவாக குறைந்து விடும். இணைய வழி மற்றும் e-books மூலமாகவே அனைவரும் படிக்க போகிறார்கள்.
9. மனிதர்கள் ஆழ்மனதில் இயற்கையோடு கிராமங்களில் வசிக்கவே விரும்புகிறார்கள். பணக்காரர், ஏழை என்ற பாகுபாடில்லாமல் ஓர் அத்திவியாச சூழ்நிலையில் தன் சொந்த ஊருக்கு செல்லவே பிரியப்படுகிறார்கள்.
10. ஜோதிடம் சொல்வர்களால் 30 சதவீதம் மட்டுமே கணிக்க முடிகிறது. மற்றதெல்லாம் குத்துமதிப்பாக உளறுகிறார்கள்.
11. மருத்துவர்கள், தூய்மைப்பணியாளர்களின் முக்கியத்துவம் மக்களுக்கு இப்போது தான் புரிந்து இருக்கிறது.
12. Uber, Ola, Bus, Metro Train, EMU Train , Auto, Rickshaw இல்லையென்றாலும் மக்களால் வாழ முடியும். வேலை நடக்கும்.
13. Gym, தியேட்டர் மற்றும் Mallகளுக்கு செல்லும் பழக்கம் வெகுவாக குறையப்போகிறது.
14. இந்தியர்கள், அமேரிக்கர்களின் ‘கட்டற்ற சுதந்திரம்’ இந்த சூழ்நிலையில் உதவுவதில்லை. அரசாங்கங்கள் சொல்வதை கேட்காமலேயே பழகி விட்டு 144, Lockdown என்றால் இளைஞர்களுக்கு புரியப் போவதில்லை.
15. சீனர்கள் நன்றாகவே வியாபாரம் செய்கிறார்கள்.
– சிவஷங்கர் ஜெகதீசன்