இப்படி ஒரு கதாபாத்திரத்தில் நடித்ததற்காக கோபியை முதலில் பாராட்ட வேண்டும். ஆண்கள் வீரர்களாகவும், பராக்கிரமசாலிகளாகவும் காட்டிக்கொள்ள ஆசைப்படுவர். அதே போல் கதாப்பாத்திரங்கள் வடிவமைத்து நடிப்பதிலேயே(உதாரணமாக action hero) இப்போது Short film எடுப்பவர்கள் முயற்சி செய்யும் போது இப்படி ஒரு கதாபாத்திரம் ஏற்று துணிச்சலாக நடித்திருப்பதே, இதை யோசித்து எழுதியதே பாராட்டுக்குரியது.

ஒரு பாரதி மற்றொரு பாரதிக்கு Sanitary Napkin கொடுக்கும் இடம் அருமை💐💐💐. கடைசியில் விளக்கெறிவதும் அது வரை ஓடாத Radio ‘அவளுக்கென்ன அழகிய முகம்’ பாடுவதும் செம 👌🏻👌🏻👌🏻.
நடிப்பு, வசனம், ஒளிப்பதிவு, பின்னணி இசை, இயக்கம் பாராட்டும் படி அமைந்திருந்தது. இவள் பாரதி குறும்படத்தின் link கீழே.