காய்கறிகள் விலை குறைந்து விட்டதால் காய்கறிகளை தெருவுக்கு தெரு எடுத்து வந்து விற்பவர்களை காணமுடிவதில்லை.
விவசாயிகள் தைப்பொங்கலுக்கு (Rabi crop season) செய்யும் அறுவடையில் காய்கறிகள் வரத்து அதிகமாக இருப்பதால் விலை குறைந்திருக்கிறது. வெங்காயம் கூட ₹45-₹49 க்கு வந்து விட்டது. மற்ற காய்கறிகள் கிலோ ₹20 க்குள். இதைத்தான் அரசியல்வாதிகள் 15 January க்கு பிறகு வெங்காய விலை குறையும் என்று சொல்லி வந்தனர்.

இது சாமான்யர்களுக்கு புரிவதில்லை. Cropping Seasons of India பற்றி தெரிந்து கொண்டால் காய்கறி விற்பவர்கள் ஏன் 15 January முதல் காணவில்லை என்பதை தெரிந்து கொள்ளலாம். Rabi பயிர்கள் மற்றும் காய்கறிகள் நவம்பரில் பயிரிடப்பட்டு மார்ச்சில் அறுவடை செய்யப்படுகின்றன. காய்கறிகளை பொருத்தவரை January 15 அறுக்கப்படுவதால் வரத்து சராசரியை விட அதிகமாகி விலையிறக்கத்திற்கு வழிவகுக்கிறது.
இந்த காய்கறிகளை கிலோ ₹20 க்கு விற்று ஒன்றும் லாபம் பார்க்க முடியாதென்பதால் காய்கறிகளை தெருவுக்கு தெரு எடுத்து வந்து விற்பவர்களை காணமுடிவதில்லை. அடுத்த ஒரு மாதத்திற்கு காண முடியாது.