இது ஒரு பயணக்கட்டுரை. எஸ்.ரா தன்னுடைய வடஇந்தியப்பயணங்களை பற்றியும், கனடா, US பயணங்களின் அனுபவங்களை எழுதியிருக்கிறார்.
பயணம் என்பது வெறும் புகைப்படம் எடுப்பதற்கானதல்ல. ஒவ்வொன்றையும் நிதானமாக நின்று ரசித்து கொண்டாட வேண்டும் என்று அவர் ரசித்த அந்தியூர் குதிரைச்சந்தையை விளக்கியிருக்கிறார்.

இதில் அந்தியூர் குதிரை சந்தை எப்போது நடைபெறும் என குறிப்பிடவில்லை. இது பற்றி புத்தக கண்காட்சியில் அவரிடம் கேட்ட போது ஆகஸ்ட் மாதம் என பதிலளித்தார். வழக்கமாக மிக விளக்கமாக எழுதுபவர் எஸ்.ராமகிருஷ்ணன். இவர் எழுதிய விதம் எனக்கு குதிரை சந்தை யை இந்த வருடம் சென்று நேரில் பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் அதிகமானது.
அதே போல் கனடாவில் உள்ள CN Tower. இப்பயணக்கட்டுரைகளில் #எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் எழுதியுள்ள மற்ற இடங்கள்.
1.திருவள்ளூர் அருகில் உள்ள குடியம் குகை
2. நயாகரா நீர்வீழ்ச்சி யை ரசித்தது
3. அந்தியூர் குருநாதஸ்வாமி தேர்த்திருவிழா வை ஒட்டி நடக்கும் குதிரைத்திருவிழா.
4. ஒடிஸா மாநிலத்தின் புவனேஸ்வர், உதயகிரி அருகிலுள்ள ஹத்தி கும்பா கல்வெட்டு
5. மைசூர் போகும் வழியில் srirangapattinam ஆற்றங்கரையில் அமைந்துள்ள திப்பு சுல்தானின் கோடை மாளிகை.
6. பாஷோவின் நினைவிடம் – ஜப்பானில் டோக்கியோ வில் உள்ள நினைவிடம்
7. நாட்டரசன் கோட்டை கருதுப்பட்டியிலுள்ள கம்பனின் நினைவிடம்
8. Toronto CN tower இல் உள்ள மிக உயரமான உணவகத்தில் சாப்பிட்ட அனுபவங்கள்.
9. மைசூர் அரண்மனை க்கு பள்ளிப்பருவத்தில் சென்றது
10. கொல்கத்தா ரயில் நிலையத்தில் மழையின் போது மாட்டிக்கொண்ட தருணங்கள்
11. அழகிய ரணக்பூர் ஜெயின் கோயில்.