எழுத்தாளர் வண்ணநிலவன் அவர்களுடைய சிறுகதை குறும்படமாகியிருக்கிறது. ஒரு எளிமையான, ஏழ்மையான கணவன், 6 மாத கர்ப்பிணியான மனைவி…அவர்களுக்குள் இருக்கும் உறவு. இதில் பலாப்பழத்தோடு பக்க்த்து வீட்டில் நுழையும் பெரியவர்.

உயரமான அடுக்கு மாடி குடியிருப்பை காட்டி அதனருகில் உள்ள ஆஸ்பெஸ்டாஸ் Sheet வீட்டை காட்டிய விதம், கர்ப்பிணியான பெண்ணுக்கு பலாப்பழம் சாப்பிட வரும் ஆசை..கணவனுக்கு சரிவர சம்பளம் வராத நிலை.. வாசனையை முகர்ந்து தன் கணவன் பலாப்பழம் வாங்கி வந்திருக்கிறான் என்று சந்தோஷம் கொள்ளும் தருணம்…என பல காட்சிகள் அருமை.
இயக்குநர் முரளி திருஞானம் பொறுமையுடன் சிறுகதையிலிருந்து தேவையானவற்றை மட்டும் கொடுத்திருக்கிறார். படத்தின் இயக்கம், பிண்ணனி இசை, ஒலி வடிவமைப்பு அட்டகாசம். வாழ்த்துக்கள் முரளி.