Office இல் இருந்து வீட்டிற்கு வர எவ்வளவு நேரமானாலும் வீட்டுக்கு வந்து சமைத்து சாப்பிடுவதே வழக்கம். இன்று வர நேரமானாலும் வரும் போது இந்த திருநெல்வேலி ஹோட்டல் திறந்திருந்தது. வழக்கமாக நான் வீட்டிற்கு வரும் நேரத்தில் எல்லா ஓட்டல்களும் மூடியிருக்கும்.

நம்ம @பாஸ்கரன் சார் சமீபத்தில் இங்கு சாப்பிட்ட அனுபவத்தை எழுதியிருந்தார். இங்கேயே இன்னிக்கு சாப்பிட்டு விடலாம் என நுழைந்தேன். Full formals இல் வேறு இருந்தேன்.
என்ன நீங்கல்லாம் இங்க சாப்பிட வர்றீங்க? என்ற பார்வைகளுக்கு ஒரு நமுட்டு சிரிப்பில் பதில் சொல்லி விட்டு எப்படி இருக்கிறது ஓட்டல் என சுத்திப்பார்த்தால் ஒரு ஆச்சர்யம்.
விறகுகள் (சினிமாக்களில் வரும் உருட்டு கட்டைகள்) நிறைய அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. விறகு அடுப்பு எரிந்து கொண்டிருந்தது. அனைத்து சினிமா கலைஞர்களும், சினிமாக்களில் பணிபுரிபவர்கள் அத்தனை பேருக்கும் ஆஸ்தான ஓட்டல் என்பது தெரிந்தது.
4 ஃபிரேம்ஸ்(Four Frames) கடிகாரம் வேறு வைத்திருந்தனர்.
சாப்பிட்ட இரண்டு தோசைகளும் செம முருகளாக செம டேஸ்ட். ஒரு அடை எடுத்துக் கொண்டு வந்து வைத்தார்கள். அது சுமார் தான். நேரம் கடந்து சாப்பிட்டதால் சட்னிகளில் தண்ணீர் கலந்து விட்டனர். ஒரு வழியாக சாப்பிட்டு முடித்து பில் கொடுக்க போனால் 100 ரூபாய் தான். 👍🏻👍🏻👍🏻.
குறைந்த செலவில் நல்ல டேஸ்டான உணவு விரும்புபவர்கள் கண்டிப்பாக இங்கு சாப்பிடலாம்.