சலனங்களின் எண் 24 – கேபிள் சங்கர்

சலனங்களின் எண் 24 – கேபிள் சங்கர்

ஒரு திரைப்படம் எடுக்கும் போது இயக்குநர்கள் சந்திக்கும் அத்தனை சவால்களையும்… வெவ்வேறு department களிடம் (24) அவர்கள் வேலை வாங்கும் போது சந்திக்கும் நிஜ பிரச்சனைகளை…மற்றும் நடிகர்கள், நடிகைகளின் பிரச்சினைகள், புரிதல் இல்லாத தயாரிப்பாளரின் தலையீட்டால் வரும் சவால்கள், ஒளிப்பதிவாளர்-இயக்குநரிடையே சிறு விரிசல் வரும் போது அதையொட்டி வரும் சிக்கல்கள், படத்தை வெளியிடும் போது ஏற்படும் வியாபார சிக்கல்கள் என மிகவும் detail ஆக, யதார்த்தமாக…சொன்ன விதம்….அருமை..

ஒரு பக்கம் இயக்குநரிடம் திட்டு வாங்கி அவமானட்டு இணை இயக்குநராக கதை சொல்லிவிட்டு காத்திருக்கும் ஸ்ரீதர்.

மறுபுறம் 48 வயதான திரை அனுபவமுள்ள அசோசியெட் இயக்குநர், கோ director என பல படங்களுக்கு உழைத்து பேரெடுத்த ராம்ராஜ்.

இவர்களின் திரைப்படக்கதையின் நாயகனாக வேலையை உதறி விட்டு வந்த ராம்.

இதை தாண்டி தயாரிப்பாளரான தனக்கு எல்லாம் தெரியும், தன்னிடம் அடங்கி கிடக்க வேண்டியவர்கள் அனைத்து இயக்குநர்களும் என்று கனடாவில் இருந்து படம் எடுக்க வந்து இயக்குநர்களிடம் ஏற்பட்ட மோதலால் தன்னுடைய படங்களை வெளியிடாமல்…இயக்குநர்களை இம்சிக்கும் தயாரிப்பாளர் சுரேந்தர்.

நித்யா, ப்ரேமி, ராம்ராஜின் தயாரிப்பாளர் மணி, அவரின் உதவியாளர் ரவி, ஸ்ரீதரின் உதவி இயக்குநர் காசி, சுரேந்தரின் production manager சேது,  இவர்களின் சவால்கள், உழைப்பு, போராட்டங்கள், என ஒரு முழு படம் பார்த்த உண்ர்வு படிக்கும் போது உருவாகிறது.

உருவாகும் இரண்டு படங்களின் கதாநாயகனாக ராம். இதில் ஸ்ரீதர் படத்தில் நடிப்பதை மற்றொரு படத்தின் இயக்குநர் ராமராஜிக்கு தெரியாமல் நடித்துக் கொண்டிருக்கிறான்.

இரண்டு படங்களுக்கும் ஒரே மேக்கப்மென்  இருந்து போக அவர் மூலமாக ராமராஜிக்கு ராம் இதைத்தவிர இன்னொரு படத்தில் நடிப்பது குறித்து தெரிய வருகிறது. இயக்குநர்களுக்கு தெரியாமல் ராம் இரண்டு படத்தையும் சமாளிப்பது…நித்யாவுடனான காதல் என ஆரம்ப Chapter கள் படு சுவாரஸ்யம்.

ஒப்பனைக்கலைஞர் மூலமாக ராமராஜிக்கு விஷயம் தெரிய வருவது அழகான திருப்பம். இதை ஸ்வாரஸ்யமாக கொண்டு போன கேபிள் சங்கர் அண்ணனுக்கு .

இதன் பிறகு தயாரிப்பாளர் சுரேந்தர் செய்யும் அடாவடிகள், ப்ரேமி தயாரிப்பாளரிடம் இருந்து தப்பிக்க ஸ்ரீதர் உதவுவது, ஒளிப்பதிவாளருக்கும் வரும் பிரச்சினைகள், ஒளிப்பதிவாளருக்கும் ஸ்டண்ட் மாஸ்டருக்கும் வரும் பிரச்சினைகளை ஸ்ரீதர் சரி செய்ய முடியாமல் தவிப்பது, அதற்குள் தயாரிப்பாளர் சுரேந்தர் படத்தை மொத்தமாக நிறுத்துவது என ஸ்ரீதரின் படம் முடியும் தருவாயில் நின்று போகிறது.

மற்றொரு படமான ராம்ராஜின் படத்தில் பிரச்சினை யில்லை என்றாலும் படம் முடியும் தருவாயில் தயாரிப்பாளர் மணி கொல்லப்பட அந்த படமும் நின்று போகிறது.

இந்தப் படங்கள் பணப்பிரச்சனை, வெளியிட இருக்கும் தடைகள், விநியோகம் செய்யும் போது வரும் தடைகள், தியேட்டர்கள் கிடைக்காமல் போவதெல்லாம் தாண்டி Release ஆனதா? அதன் பிறகு ஸ்ரீதர், ராமராஜ், ராமிற்கு அடுத்தடுத்து படங்கள் கிடைத்ததா? என்பதை படு ஸ்வாரஸ்யமாய் சொல்லிய விதம் அருமை.

Advertisements

Leave a Reply