வாசிப்பனுபவம்: பூவரசம் வீடு – பாஸ்கர் சக்தி – Discovery Book Palace
நான்கு நண்பர்கள் சரவணன், சுந்தர், மணி, பாலா இவர்களோடு வீரையன்.
இவர்களின் ஊரில் இருக்கும் பூவரச மரமுள்ள வீட்டிற்கு குடி வரும் லீலா, அம்சவேணி, கிருஷ்ணவேணி, நீலவேணி மற்றும் அழகு.
இதில் வீரையன் கதாபாத்திரம் படிக்கப் படிக்க கிழக்கு சீமையிலே, வடசென்னை படங்களில் வருபவரை(வடசென்னை படத்தில் ஐஸ்வர்யா வின் தந்தையாக வருபவர்)… அடிக்கடி ஞாபகப்படுத்தியது.

நான்கு நண்பர்களைக் பார்த்து …குறிகாரன் ‘சாபம்..சாபம்… சபிக்கப்பட்ட வீடு இது’ என்று சொல்லும் இடத்தில் கதை அடுத்த இடத்திற்கு நகர்கிறது. ஆர்வம் மிகையாகிறது.
மூன்று இடங்களில் பாஸ்கர் சக்தி எழுதிய விதம் அட்டகாசம்.
1. படம் பார்த்து வெளியே வரும் ஜனத்திரளினில் சரவணன் – கிருஷ்ணவேணி சேர்ந்தும் விலகியும் நடக்க நேரிட்டதும் அதில் காதலர்கள் பேசிக் கொள்வதை அவர்களுக்குள் நடக்கும் வேதியியலை சொன்ன விதம்…
2. கிருஷ்ணவேணி யின் பார்வையின் பின்னிருந்து மற்றொரு மொழியை சரவணன் தெரிந்து அவளின் குறுகுறுப்பையும், பொய் கோபத்தையும், ஆசைகளையும் உள்வாங்கும் இடங்கள்..
3. லீலாவின் மனநிலையை.சொல்லும் இடத்தில்..”தகப்பனென்று ஒருவன் இருந்தால் தன் பெண் பிள்ளைகளை ஒரு ஆணின் தோரணையில் அடக்கி வைப்பான்.ஆனால் பெண்ணாகிய நான் இப்படி அழுது, ஆங்காரம் பண்ணி அவர்களது மனத்தில் என் மீதான பரிதாபத்தையும், பயத்தையும் ஒருங்கே ஏற்படுத்தி அவர்களை கட்டுக்குள் வைத்திருப்பது என்ன தப்பு? என்று நியாயம் தேடும் இடங்கள்.
பல இடங்களில் எழுதிய விதம், 80களின் கிராமப்பின்னணியை காட்சியாக கண் முன் கொண்டு வந்து நிறுத்தியது.
#43rdChennaiBookFair #CBF2020 #43வதுசென்னைபுத்தககண்காட்சி #43rdCBF2020