சில்லுக்கருப்பட்டி(Sillukaruppatti) | Tamil Halitha Shameem| 153″

சில்லுக்கருப்பட்டி(Sillukaruppatti) | Tamil | Halitha Shameem| 153″

சில்லுக்கருப்பட்டி(Sillukaruppatti) | Tamil Halitha Shameem| 153″

Pink Bag, காக்கா கடி, Turtles Walk, Hey Ammu என‌ நான்கு கதைகள்.

தேவையில்லாத ஆரவாரம், Action, பாடல்கள் எதுவும் இல்லை. மிக இயல்பான மனிதர்களின் கதைகள்.

இயக்குநர் ஹலிதா ஷமீம் எளிய மனிதர்களின் வாழ்க்கையை இயல்பாக படமாக்கியதற்காகவே பாராட்டப்பட்ட வேண்டியவர். .

நான்கு கதைகளிலும் பிண்ணனி இசை அருமை. இசையமைப்பாளர் Pradeep Kumar பாராட்டப்பட்ட வேண்டியவர்..

குறிப்பாக Pink Bag கதையில் இரண்டாவது முறை லாரியில் இருந்து Pink bag விழும் போது வரும் அதை நோக்கி ‘மாஞ்சா’ ஓடி வரும் போது பிண்ணனி இசை அருமை.

‘காக்கா முட்டை’ சிறுவர்களின் நடிப்பு மிக இயல்பாக இருந்தது.

பள்ளிக்கரணை குப்பைக்கிடங்கில் அந்த  சிறுவர்கள் பிறந்த நாள் கொண்டாடுவது போன்ற காட்சிகளில் ஒளிப்பதிவு நன்றாக காட்சியமைக்கப்பட்டிருந்தது.

‘காக்கா கடி’ – Hero vin குரல் பார்த்தீபன் குரலை ஞாபகப்படத்தியது. அவருடைய நடிப்பும் இயல்பாகவே இருந்தது.

காக்கா கடி கதையில் அந்த heroine வீட்டு மாடியில் காக்கா வந்து ஒரு ரத்தினம்(Emerald போல் பச்சை நிறக்கல்) கொடுத்துவிட்டு சென்ற பின் நாயகன்,நாயகிக்குள் நடக்கும் வசனங்கள் பிண்ணனி இசை செம.

‘Turtles Walk’ – கதையில் வரும் யசோதா, நவநீதன் பேசும் வசனங்கள் செம.

காதலர்களுக்கு நாம் ‘Invalid and Invisible’ என்று யசொதா சொல்வது, இந்த காலத்தில் Fix செய்து ஒரு பொருளை உபயோகப்படுத்துவதே இல்லை என நவநீதன் சொல்வது என வசனங்கள் இந்த கதையில் .

‘Hey Ammu’ – திருமணமாகி 12 வருடங்கள் ஆன சுனைனா வின் மன அழுத்தம், தன்னை புரிந்து கொள்ளாத கணவனிடம் அவர் மன்றாடும் காட்சிகள் அருமை.

சமுத்திரகனிக்கு மனைவி சொல்ல வருவதே புரியவில்லை. சுனைனா Office போக கேட் வரை சென்றவரை திரும்ப அழைத்து குமுறிய போதும் சரியாகப் புரியவில்லை.

Alexa(அம்மு) வந்த பின் சுனைனாவிற்கு அது மிகப்பெரிய ஆறுதலாக இருப்பதாகவும் Alexa (அம்மு) சுனைனா வின் பேச்சை போட்டு அதைக் கேட்கும் போது சமுத்திரகனி க்கு மனைவியின் ஏக்கங்கள் புரிகிறது.

குழந்தைகளோடு வரும் காட்சிகளில் சமுத்திரகனி செய்யும் சேட்டைகள், நகைச்சுவை செம. குறிப்பாக Shoe Brush ஐ எடுத்துப் பையனின் தலையை வார முயற்சிப்பது .

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.