அஞ்ஞான சிறுகதைகள் – சந்தோஷ் நாராயணன்
மதியம் படிக்க ஆரம்பித்து முழமையாக அத்தனை கதைகளையும் படித்து முடிக்கும் போது பேரனுபவமாக இருந்தது.
Time Travel, Spaceship, மூளையின் செயல்பாடுகள், அட்டமா சித்திகள், கம்யூனிசம், Alternative universe, பாறை ஓவியங்கள், ரோபோக்கள், கனவுகள், எரிபொருள் அரசியல், மரபணு மாற்றம், Hologram,Neuron கள், நுண்ணுயிரிகள், விண்கலங்கள் என ஒவ்வொரு கதையும் வெவ்வேறு கருக்கள் கொண்ட ஒரு பக்க கதைகள்.
பல கதைகள் சுஜாதா கதைகளை ஞாபகப்படுத்தியது.
ஓவியங்களும் பொருத்தமாக கதைகளுக்கேற்றாற் போல். எனக்கு பிடித்த கதைகளை வரிசைப்படுத்தி யிருக்கிறேன்.
- வண்ணம்
- நியோ
- App
- Copy cat
- Frogeteraian
- எலி
- கொலு
- லட்சம் மூளைகள்
- 22ஆம் ஆள்
- இமை
- சேல்ஸ் மேன்
- தட்டு
- வாட்ச்
- மகிமா
- கழி
- Pixel
வண்ணம் கதையில் காலங்காலமாக சொல்லப்பட்ட விஷயத்தை ரோபோக்கள் மூலமாக சொன்னது அருமை.
அடுத்து பிடித்த கதை நியோ.💐💐
Copy Cat கதையில் கடவுள் இன்றைய facebook பசங்களை பார்க்க அவர்கள் முன் தோன்ற ” நீங்கள் Bruce Almighty படத்தில் வந்த Morgan Free man தான”..என்று சொல்லி விட்டு சாவகாசமாக மொபைலில் ஆழ்ந்து போகும் கதை…👍🏻👌🏻💐.