“இடைதெரிந்து நன்குணர்ந்து சொல்லுக சொல்லின் நடைதெரிந்த நன்மையவர்”
“சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்.”
Kamal Haasan க்கு முன்ஜாமீன் வழங்கும் முன் நீதிபதி இத்திருக்குறள்களை மேற்கோள் காட்டி
“சொற்களின் நன்மையை ஆராய்ந்து நல்லவர்கள் பேசும் போது, கேட்பவர்கள் தவறாக புரிந்து கொள்ளா வண்ணம் பேச வேண்டும். சொற்களில் பயனுள்ள சொற்களை மட்டுமே கூற வேண்டும்” எனக்கூறியுள்ளார்.
கமல் பேச்சு இன்னும் எளிமையாக இருக்க வேண்டும் …அனைவருக்கும் புரியும்படி இருந்தால் தான் சென்றடையும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
ஆனால் கமலின் அரவக்குறிச்சி பேச்சை(13 நிமிட பேச்சு) முழுமையாக கேட்காமல், சரித்திரங்களையோ, கோட்சேவையோ முழுமையாக அறியாமல் அதிகப்பிரசங்கித்தனமாக Media, Social Media க்களில் பொங்கி எழுபவர்கள் தான் 95% பேர். பத்திரிக்கைகள்,தொலைக்காட்சி கள் எந்த சர்ச்சையான Headline போடலாம் என்று யோசிக்கும் காலத்தில் கமல் எப்படி பேசியிருந்தாலும் அதை சர்ச்சையாக்க துடிக்கும் கூட்டமே அதிகம்.
இந்த அரைவேற்காடுகளை கமல் கண்டுகொள்ள வேண்டிய அவசியமில்லை.