Super Deluxe – நன்மையும் தீமையும் ஒன்று தான்
‘நன்மையும் தீமையும் ஒன்று தான்’, ‘ ‘நியாயம் வேற நடைமுறை வேற’,
‘நீ அப்பாவா இரு;இல்ல அம்மாவா இரு, ஆனா எங்களோட இருந்துத் தொலை…யேன்’ என்று ராசுக்குட்டி யாக நடித்த சிறுவன் சொல்வது, ‘Proton, Electron’ என நம் மூளையை குழப்பி விட்டது வரை அட்டகாசமான வசனங்கள், Punch கள்.
கேபிள் சங்கர், மணிஜி, ஏஜி சிவகுமார் என மூவருமே படத்தை ஏமாற்றம் என எழுத….மற்றவர்கள் இந்த படத்தை கொண்டாட.என்ன தான் இருக்கிறது என பார்க்கும் ஆர்வம் அதிகமானது.
3 கதைகளை எடுத்து அதில் பல காட்சிகளை திரை மொழியாக சொன்னது அருமை. Director தியாகராஜன் குமார ராஜாவுக்கு ஒரு 💐.
யுவனின் பின்னணி இசை அடுத்த உயரத்திற்கு சென்றிருக்கிறது. குறிப்பாக Fahath Faasil- Samantha கதையில் யுவனின் பின்னணி இசை செம.
ராசுக்குட்டியாக நடித்த சிறுவனும், ராமசாமி யாக மிஷ்கினுடன் நடித்தவரும் செம நடிப்பு.
ஒளிப்பதிவாளர் கதைக்கேற்ற கோணங்களில் விளையாடிருக்கிறார். Lighting and Exposure அட்டகாசம்.
விஜய் சேதுபதி திருநங்கையாக Police Station இல் தன் மகன் முன் போலிஸூக்கு பதில் சொல்ல முடியாமல் தவிக்கும் காட்சிகள், வீட்டில் மகன் கதவை அடைத்துக்கொண்டு பேசும் போது என பல இடங்களில் 👌🏻👌🏻👌🏻. School இல் வரும் காட்சிகளிலும் கலக்கியிருக்கிறார்.
மிஷ்கின், ரம்யா கிருஷ்ணன் இருவரும் கதாபத்திரங்களாகவே மாறியிருக்கிறார்கள். நடிக்கிறார்கள் என்ற உணர்வே இல்லை.
இசை ஞானியின் பாடல்கள் நிறைய இடங்களில் வந்து போகிறது. Bappi Lahari ஆரம்பத்திலும்..முடிவிலும் வேறு…
3 பையன்களின் Portion பல இடங்களில் ஸ்வாரஸ்யம். செம யதார்த்தமான கதை அந்த பையன்களின் கதை தான். விழுந்து விழுந்து சிரிக்க நிறைய காட்சிகள்.
Interval க்கு பிறகு பிணத்தை வைத்துக்கொண்டு சமந்தா- Fahath Faasil நிறையவே போரடிக்கிறார்கள்..பக்ஸ்…பெர்லினாக வந்து அந்தக்கதையை இன்னும் ஒப்பனாக்கியிருக்கிறார்…😊..
கடைசி 5 நிமிடங்களில் மனுஷ்யபுத்திரனும், வேற்று கிரக பெண்ணும் Proton, Electron, Neutron என ஆரம்பித்து நம் மூளைக்கு மிக அதிகமான தகவல்களை தந்து ஒரு குழப்பு குழப்புகிறார்கள்.
ஆனாலும் இந்தப்படம் 18+ நண்பர்கள் ஒரு Weekend இல் ஜாலியாக பார்க்க வேண்டிய படம். அளவான தகவல்களை மட்டும் சொல்லியிருந்தால் படம் இன்னும் நன்றாக அமைந்திருக்கும். #SuperDeluxe