பெண்ணியம் என்பது தன் பாலினத்தின் மீதான அன்பும், பிற பாலினத்தின் மீதான அன்பும், புரிதலும்(Love of Same, Love of other) தான்.
ஒரு ஆண் தன்னைப்புரிந்து கொள்ள வேண்டும் என முனைப்பு காட்டும் பெண்கள், தன் பாலினமான பெண்களை எந்த வரையில் புரிந்து வைத்திருக்கிறார்கள் என்றும் தனது பிம்பம், தனது ரசனை, தனது வளர்ச்சி என சுய நல.. சுய மோகத்தில் விழும் ஆண்களுக்கு குடும்ப பெண்களின் உலகத்தில் நிகழ்பவை எரிச்சலூட்டுபவைகளாக மாறி விடுகின்றன என இந்த புத்தகம் பேசும் விஷயங்கள் அட்டகாசம்.
நவீனா ஆணாதிக்கத்தை பற்றி மட்டும் பேசாமல் போலி பெண்ணியவாதிகளைப் பற்றியும் பேசியிருக்கிறார்.
கண்டிப்பாக ஆண்கள் படிக்க வேண்டிய புத்தகம்.
“இயற்கையில் படைக்கப்பட்ட அனைத்து உயிரினங்களிலும் ஆண், பெண்ணை விட அழகாக தோன்றும்படியான ஏதோ ஒரு கூடுதலான அம்சம் தரப்பட்டு , பெண்ணினத்தை தன் பால் ஈர்க்க அதை பயன்படுத்தி வருவதற்கான அமைப்பு இருக்கிறது. ஆனால், மனித பிறவியில் மட்டும் அழகு என்பதைப் பெண்ணோடு பொருத்தி, அதற்காக பெண், தனது வாழ்நாளில் பெரும்பகுதியைச் செலவிடும்படி செய்து, அவளின் ஆக்க சக்தியைச் சமூகம் வீணடித்து வருகிறது”. 💐💐
பெண்கள் அழகுக்கு மதிப்பளித்து விட்டு ஆரோக்கியத்தை மறந்து விடுவதே இங்கு பெரிய பிரச்சினை. நிறம், உடல் எடையின் பொருட்டு ஏற்படும் தாழ்வுமனப்பான்மையிலிருந்து பெண்கள் முற்றிலும் வெளி வர வேண்டும். பெண்கள் வெளித்தோற்றத்திற்காக உணவை தியாகம் செய்யாமல் அவர்களுக்கு பிடித்த உணவை சாப்பிடுவது உளவியல் ரீதியாக பல மன அழுத்தங்களிலிருந்து வெளியே வர உதவும். உறவுச்சிக்கல்களை குறைக்கும். 💐💐💐
பணமும் பாலினமும் எனும் கட்டுரையில் – “பல நேரங்களில் பெண்களின் உழைப்புக்கான மரியாதையையும் அங்கீகாரத்தையும் ஆண்களே அனுபவித்து வருகின்றனர். மாறாக தவறுகள் நிகழும் போது, அதில் ஆண்களின் பங்களிப்பு இருந்தாலும் கூட அந்த தவறுகளை பெண்களே சுமக்க நேரிடுகிறது.” 👌🏻👌🏻உண்மை.
இரு பாலினமும் வேறுபட்ட குணங்களையும் ஆற்றல்களையும் உடல் அமைப்புகளையும் கொண்டிருந்தாலும், தனிப்பட்ட வகையில் தன்னிறைவானவர்கள் தான். உயர்வு மனப்பான்மையும் தாழ்வு மனப்பான்மையும் அற்ற சமநிலை நோக்குடன் இரு பாலினத்தையும் அணுகுவது மட்டுமே இருவருடைய ஆற்றல்களையும் முழுமையாக வெளிக்கொணர்ந்து, அவர்வர்க்கான தனிப்பட்ட அங்கீகாரத்தையும், மதிப்பையும் பெற்றுத்தரும் வழித்தடமாக அமையும்.👏🏻👏🏻👏🏻.