வாடகைக்கு வீடு தேடும் நடுத்தர குடும்பத்தினர்களுக்கு ஏற்படும் ஏமாற்றங்கள், அதிர்ச்சிகள், வேதனையை அழகான திரை மொழியில் சொல்லியிருக்கும் படம். அட்டகாசமான ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு, இயக்கம்.
ஒரு நடுத்தர Nuclear family யை இவ்வளவு அழகாக வேறு யாரும் காட்சிபடுத்தியதில்லை. இயக்குநர் , ஒளிப்பதிவாளர் செழியன் அவர்களுக்கு ஒரு 💐💐💐.
32 சர்வதேச விருதுகள், 100 சர்வதேச திரை விழாக்களை பார்த்த படம் என இப்படம் அடைந்திருக்கும் உச்சம் தமிழர்கள் அனைவரும் பெருமை கொள்ள வேண்டிய படம்.
வீடு தேடிய, தேடும் நடுத்தர வர்க்கத்தினர் இந்த படத்துடன் தங்களை பொருத்திப்பார்க்க முடியும்.
வீடு தேடும் படலம் தவிர அவர்களுக்குள் நடக்கும் உரையாடல்கள், சிறுவன் சித்து, இளங்கோ விளையாடும் காட்சிகள், இளங்கோ – அமுதா இருவர்க்கும் நடக்கும் சிறு சிறு கொஞ்சல்கள், ஊடல் அருமை.
காட்சி 1 – இளங்கோ- அமுதா தங்கியிருக்கும் வீட்டிற்கு வாடகைக்கு பார்க்க மற்ற குடும்பங்கள் வந்து பார்ப்பது, இரண்டு முறை ஆட்களை காட்டி விட்டு மூண்றாம் முறை கதவு திறப்பதும்…குருவி வந்து செல்வது போல் வரும் காட்சி செம..
காட்சி – 2 – புது வீட்டிற்கு செல்லப்போகும் சந்தோஷத்தில் அமுதா திலைத்திருக்க இளங்கோவை கட்டிக்கொண்டு பேசும் காட்சிகள் அருமை.
நாயகன் சந்தோஷ், நாயகி ஷீலா, சிறுவன் தருண் மூவரும் அருமையான நடிப்பை கொடுத்திருக்கிறார்கள்.
#tolet #toletthemovie