காதலிக்கும் நிலையில் ஆணுக்கும், பெண்ணுக்குமிடையே ஒருவரை ஒருவர் கவர்ந்திழுக்கும் ஈர்ப்பு சக்தி யை Maintain செய்ய மெல்லிய காற்று வளையம் போல் சில ரகசியங்கள் வேண்டும். எதிர்பார்ப்புகள் தீரும் போதும், காதலர்களுக்கே உரித்தான ரகசியங்களும் மற்ற விஷயங்கள் அனைத்தும் முன்னரே முடிந்து விட்டால் காதலர்களின் Priority மாறி விடும், காதலும் சுவாரஸ்யம் குறைந்து நீர்த்துப்போய் விடும். இந்நாவல் பேசும் கரு இது.
காதலர்கள் விக்னேஷ், அர்ச்சனா ஒருவருக்கொருவர் அறிமுகமாவது…
விக்னேஷ், தன் தந்தை ராகவனை மன நல மருத்துவர் விஷ்ணுவிடம் அழைத்து வர முதன்முறையாக அர்ச்சனா விக்னேஷை பார்க்கிறாள்.
விக்னேஷ் அர்ச்சனா வை பார்க்க முடியாமல் கூச்சப்படுவதை., சிணுங்குவதை..விளக்கும் போது..
“இன்றைக்குத்தான் தெரிகிறது ஜெமினி கணேசனின் சிரமம்” என்று எழுதியிருக்கிறார்.👍🏻👌🏻💐.
காதலர்களின் உரையாடல்களில் பாஸ்கர் சக்தி கலக்கியிருக்கிறார்.
அர்ச்சனா வின் Perspective இல் எழுதிய உரையாடல்கள்,விக்னேஷ் பேர் தெரியாமல் பேரை அறிய மேற்கொள்ளும் சிறு சிறு முயற்சிகள்…, அவளின் முணுமுணுப்பு, விக்னேஷுக்கு மனதிற்குள்ளே…Nickname வைப்பது என பெண்ணின் காதல் அரும்பும் தருணங்கள் அருமை.
“தலை நிமிராமல் என்னவாம்…பேப்பரில் அப்படியொரு கவனம் உனக்கு….இங்கு நான் அநாவசியமாக நிற்பது உன்னை பார்க்கும் விருப்பத்தினால் மட்டுமல்ல…நீயும் என்னைப்பார்க்க கூடிய சந்தர்ப்பத்தை அளிக்கவும் தான்..புரியவில்லையா?” / செம..👌🏻💐💐./
நண்பன் நவ்நீத்தின் குழந்தை பிறந்த நாளுக்கு செல்லும் விக்னேஷ்- அர்ச்சனா அங்கே எதிர்பாராத விதமாக அவர்களுக்கு கிடைக்கும் தனிமை…தவறுகள்…அங்கே நடக்கும் உரையாடல்கள் செம.
விஷ்ணு- மல்லிகா உரையாடல்களில் தன் மகள் அர்ச்சனா… விக்னேஷீடம் மிக நெருங்கி அவர்களுக்குள் எந்த ரகசியமுமில்லாமல் என உடைக்கும் இடம் அருமை.
நித்யா- செல்வம் என புதிதாக கதாப்பாத்திரங்களை அறிமுகப்படுத்தி அவர்களுக்கு அர்ச்சனா- விக்னேஷ் ரகசிய திருமணம் நடத்தி அவர்கள் திருமணம் தோல்வியில் முடியும் போதே அர்ச்சனா- விக்னேஷ் காதலும் வெற்றி பெறாது என்ற பொறி நமக்குள் படிக்கும் போதே ஏற்பட்டு விடுகிறது.
மன நல மருத்துவராக Modern தந்தையாக பெண்ணின் காதலை முன்னரே புரிந்து கொண்டு மனைவி மல்லிகாவுக்கும் சொல்வது, பெண்ணுக்கு கூறும் அறிவுரைகள், விஷ்ணு, மல்லிகா உரையாடல்கள் செம…
“ஆணுக்கும் பெண்ணுக்கும் மத்தியில ஆகர்ஷண சக்தி இருந்திட்டிருக்கிற வரைக்கும் காதல் நீடிக்கும். அந்த ஆகர்ஷண சக்தியை சுவாரஸ்யத்தை பாதுகாத்துடனும்…குறைஞ்சது கல்யாணம் வரைக்கும்.” …
ரகசியமில்லாத காதல் நீர்த்துப் போனதை டாக்டர் விஷ்ணு மூலம் பாஸ்கர் சக்தி சொல்லும் விளக்கங்கள் அட்டகாசம்.