பள்ளி மாணவர்களுக்கு 5 நிமிட மேடை நாடகங்கள் – இயக்குநர் ராசி அழகப்பன்
மொத்தமாக 10 நாடகங்கள். காட்சிகளாக பிரித்து இடம், நேரம், கதாபாத்திரங்கள் என Detail ஆன நாடகங்களாக மாணவர்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் எழுதியிருக்கிறார்.
நாடகங்களை எழுதுவது மட்டுமில்லாமல் அவை சிறப்பாக மேடையில் அமைய ஒளி, ஒலி சேர்க்கும் Tips முன்னுரையில் கொடுத்திருக்கிறார்.
நமக்கு தெரிந்த கதைகளை புதிய கோணத்தில் படிப்பது என்றுமே சுவாரஸ்யம் தான்.
பாட்டி வடை சுட்ட கதை – யை வேறு கோணத்தில் காகம் உழைத்து வடை பெறுவது போல் சொல்லியிருக்கிறார்.நரியிடம் காகம் உழைப்பின் பெருமையை சொல்ல நரி மயங்கி விழுவது போல் முடிகிறது.
இதை மாணவர்கள் நாடகமாக அரங்கேற்றினால் நன்றாகவே பொருந்தும்.
மரம் – மனிதன் நாடகத்தில்
“தொட்டிச்செடிகள்ல மூலிகை குணங்கள் கொண்ட கற்றாழை, துளசி, செம்பருத்தி, கற்பூரவள்ளி வளர்க்கலாம். அதன் வேர் ஆழமா போகாது”
என ரங்கசாமி Character சொல்கிறது.
செம..💐.
நிறங்கள் – நிஜங்கள் நாடகத்தில் வரும் வசனம்…
“யாருக்கும் இங்க தான் பிறக்க போறோம்னு தெரியாது. பிறப்பில ஒண்ணும் இல்ல..
நினைப்பில தான் எல்லாம்.” 👍🏻👌🏻💐.
பாரதியும், பாரதிதாசனும் தற்கால சூழ்நிலையில் தெருக்களில் உலவினால் எப்படியிருக்கும் என்றும், கம்பனும், இளங்கோவடிகளும் ஓர் தொலைக்காட்சி விவாதத்தில் பேசினால் எப்படி இருக்கும் என்ற கற்பனையிலும் இரண்டு நாடகங்கள்.
எமதர்மன்- சித்ரகுப்தன் நாடகங்கள் நகைச்சுவையாக பல திரைப்படங்களில், TV இல் நிறைய பார்த்திருக்கிறோம். அது போல இதிலும் சித்ரகுப்தன் எமன் ரோல் ஒரு நாள் செய்தால் என்னாகும் என நகைச்சுவை நாடகமாக எழுதியிருக்கிறார்.