நேற்று இரண்டாம் முறை சென்னை புத்தக கண்காட்சிக்கு சென்றிருந்தேன். வாங்கிய புத்தகங்கள் 11. இயக்குநர் ராசி அழகப்பன் அவர்கள் அன்பளிப்பாக கொடுத்த புத்தகம் என மொத்தம் 12 புத்தகங்கள்.
எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், இயக்குநர் கேபிள் சங்கர், பவா செல்லதுரை, டிஸ்கவரி வேடியப்பன், எழுத்தாளர் பாஸ்கர் சக்தி, எழுத்தாளர் தமிழ்நதி, இயக்குநர் செழியன், மனுஷ்யபுத்திரன், எழுத்தாளர் சாரு நிவேதிதா, இயக்குநர் ராசி.அழகப்பன், தமிழ் ஸ்டுடியோ அருண், நண்பர் ஜெயராஜ் சுப்ரமணியம், ஆரோக்கியம் & நல்வாழ்வு ‘Shankarji’, ‘We Can Shopping’ Guhan ஆகியோரை சந்தித்து பேச முடிந்தது.
வாங்கிய புத்தகங்கள் :
- ஆயிரம் வண்ணங்கள் – எஸ்.ராமகிருஷ்ணன் – தேசாந்திரி பதிப்பகம்
- நகுலன் வீட்டில் யாருமில்லை – எஸ்.ராமகிருஷ்ணன் – தேசாந்திரி பதிப்பகம்
- காற்று வளையம் – பாஸ்கர் சக்தி – Discovery Book Palace வெளியீடு
- பள்ளி மாணவர்களுக்கு 5 நிமிட மேடை நாடகங்கள் – இயக்குநர் ராசி அழகப்பன் – நிவேதிதா பதிப்பகம்
- மாயக்குதிரை – தமிழ்நதி – Discovery Book Palace வெளியீடு
- ஸீரோ டிகிரி – சாரு நிவேதிதா
- வேல ராமமூர்த்தி – தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள்
- கந்தர்வன் – தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள்
- அஞ்ஞான சிறுகதைகள் – சந்தோஷ் நாராயணன் – உயிர்மை பதிப்பகம்
- கடவுள் என்னும் கொலைகாரன் – குகன் – We Can Shopping
- RAW – இந்திய உளவுத்துறை எப்படி இயங்குகிறது? -குகன் – We Can Shopping
- ஒரு துளி நட்சத்திரம் – ஒளிப்பதிவாளர் CJ Rajkumar