காட்சிகளை விளக்கமாக எழுதி வாசகர்களின் மனதுக்குள் காட்சிகளை கொண்டு வருகிறார் பிரபஞ்சன்.
இரண்டு ஆசிரியர்கள், ஒருவர் Headmaster, மற்றொருவர் தமிழாசிரியர்…அவர்களுக்குள்…வகுப்புகளையும், இந்த உலகையுமே…அலட்சியப்படுத்தும்…அற்புதமரி என்னும் பத்தாம் வகுப்பு மாணவியைப் பற்றி நடக்கும் உரையாடல்.
Headmaster அற்புதமரிக்கு TC கொடுத்து விட வேண்டும் என்று சம்பவங்களை அடுக்குகிறார்.
10th Standard க்கே கோட் அடித்து கோட் அடித்து பதினெட்டு வயதில் தான் வந்திருக்கிறாள். ட்ரெஸ் செய்வது சகிக்கல..Pant பிய்ந்து தெறித்து விடுமோன்னு நமக்கு பயமா இருக்கு…. 12 நாள் தான் ஸ்கூலுக்கே வந்திருக்கான்னு …TC கொடுக்க போவதற்கான காரணங்களை அடுக்குகிறார் Head Master.
அவளுக்கு TC கொடுத்து விட்டால் அந்தச் சின்னப்பெண்ணின் வாழ்க்கையே வீணாகி விடும் என்று கூறும் தமிழாசிரியர்… தன் மனைவியுடன் அற்புத மரியின் வீட்டிக்கு செல்கிறார்.
தலை கலைந்த தூங்கி எழுந்த முகத்துடன் இவர்களை வரவேற்கும் மரி சட்டையும் கைலியுமாக இவர்களை வரவேற்கிறாள்.
அப்பாவும் அம்மாவும் பிரிந்து வெவ்வேறு திருமணம் செய்திருக்கின்றனர். அம்மா மட்டுமே அவ்வப்போது வந்து மரியை கவனித்து செல்கிறார். ஓட்டலில் சாப்பிடுவதாக சொல்கிறாள் மரி. அன்பிற்கும் அரவணைப்பிற்கும் ஏங்கும் பிள்ளையாகவே தமிழாசிரியருக்கும் அவர் மனைவிக்கும் அவளைப்பற்றி தோணுகிறது.
“பீச்சுக்கு போகலாமா?” என தமிழாசிரியர் கேட்க சந்தோஷமாக கிளம்புகிறாள் மரி.
பீச்சில் காரவடை உரிமையோடு கேட்க வாங்கி கொடுக்கிறார் தமிழாசிரியர். ஆசிரியர் மனைவி சுமதி எங்கள் வீட்டில் தான் ராத்திரி சாப்பாடு என்று சொல்ல…
“இருக்கட்டுங்க்கா” என்கிறாள் மரி.
தொடர்ச்சியாக காலையும் மாலையும் தமிழாசிரியர் வீட்டில் சாப்பிட ஆரம்பிக்கிறாள் மரி.
“நான் ஸ்கூலுக்கு வர்றதே இல்லைன்னு நீங்க ஏன் கேட்கலை? யாரும் என்னை கேட்கிறதுக்கு இல்லைங்கறதனால தான்..நான் இப்படி விட்டேத்தியா இருக்கேன்?” என்று விசும்பி விசும்பி அழுகிறாள் மரி.
“உனக்கே அது தோணனும் தானே காத்திருக்கேன்.இப்பவும் ஒன்றும் முழுகி போய்விடவில்லை..நாளையிலேர்ந்து நாம ஸ்கூலுக்கு போறோம்” என்கிறார் தமிழாசிரியர்.