நேற்றும் இன்றும் இந்நூலை படித்து முடித்தேன்.
1. ஹிரோஷிமா வில் மணி ஒலிக்கிறது
2. புல்லினும் சிறியது
ஆகிய இரண்டு நூல்களின் புதிய பதிப்பு இந்த புத்தகம்.
எஸ்.ரா வின் ஜப்பான் பயணம் மற்றும் அமேரிக்க பயணங்கள், அனுபவங்கள் பற்றிய புத்தகம்.
நடை (#Walking) ஓர் உடற்பயிற்சி மட்டுமல்ல. அது ஒரு கலை..அதிலுள்ள ஆனந்தம்..ஆன்மாவை திருப்திபடுத்துகிறது என்கிறார்.
புத்தர், மகாத்மா காந்தி, தோரோ(Henry David Thoreau), டாக்டர் ஜே. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் இயற்கை யோடு நடத்தலின் அனுபவத்தை ஆனந்தத்தை பதிவிடுகிறார்.
ஜப்பானியர்களின் அமைதி, தனிமை விரும்பிகளாக வும், உரத்து பேசிக்கொள்ளாத தன்மை , சாலைகளில்,வீடுகளில் நிலவும் பேரமைதி, பதற்றப்படாத வாழ்க்கை, ரெயில் பயணங்களிலும் புத்தகம், இசை கேட்பது, Comics படிக்க சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை காட்டும் ஆர்வம் என ஜப்பானியர்கள் பற்றி அடுக்கியிருக்கிறார்.
காமகுரா புத்தர் சிலை, சாமுராய்களின் வாழ்க்கை முறை..வேகவைத்த உணவு வகைகளை, அரிசி என Chopstick இல் ஒவ்வொரு பருக்கையாக எடுத்து சாப்பிடுவது, Green Tea அற்புதமான சுவை,Bullet train அனுபவங்கள் என நீள்கிறது.
புராகுமின்(Burakumin) என்ற சமுகத்தை சேர்ந்த மக்களை தீண்டத்தகாதவர்களாக மற்ற சமூகத்தினர் பாவித்ததும் பின்னர் மெய்ஜி பேரரசர் காலத்தில் தீண்டாமை அகற்ற உத்தரவிடப்பட்டதும் விளக்குகிறார்.
ஹிரோஷிமா வில் இரண்டாம் உலகப்போரில் அணுகுண்டு வீசியதை விளக்கமாக எழுதியிருக்கிறார்.
அமேரிக்கா ஐந்து இடங்களை அணுகுண்டு வீச தேர்வு செய்து அதில் ராணுவ தளவாடங்கள், முகாம்கள், தொழிற்சாலைகள் இருந்த இடமாக ஹிரோஷிமா விளங்கியதால் அதை தேர்ந்தெடுத்ததையும், Pearl Harbour ஐ தாக்கியது ஜப்பான் தளபதி செய்த பெருந்தவறு என்றும் குறிப்பிடுகிறார்.
அமேரிக்க பயணக்கட்டுரை Walden குளத்தை காண சென்றதில் தொடங்கி
Henry David Thoreau பற்றியும் அவர் நடத்தல், இயற்கை பற்றி சொல்லிய விஷயங்கள் இடம்பெற்றிருக்கிறது.
வாழ்க்கையின் அர்த்தங்களை இயற்கையிடமிருந்து கற்றுக் கொண்டு மீண்டும் வாழ்க்கைக்கே திரும்பி வந்து அதை முமழுமையாக வாழ்வதே ஒருவன் செய்ய வேண்டிய முதற்பனி என்பதே தோரோவின் குறிக்கோள்.
நடத்தலின் ஆனந்தம் பற்றி எழுதியதில் எனக்கு பிடத்த வரிகள்…கீழே..
நன்றாக நடக்க தெரிந்தவன் பாக்கியவான். அவன் உலகை தனது கால்களால் அளக்கிறான். நீண்ட தூரங்களுக்கு தனியாக ஒருவன் நடக்க ஆரம்பிக்கும் போது ஒருவன் தனது மனவலிமையை, உடலுறுதியை ஆராயத் துவங்குகிறான். நடை ஒருவனை உறுதிபடுத்துகிறது. விழிப்புணர்வு கொள்ள வைக்கிறது. நடை என்பது ஆரோக்கியத்திற்கான மருந்து மட்டுமல்ல, அது ஆன்மாவிற்கான மருந்து.
#Writer #SRamakrishan