8 வகையான தனிமைகள் – இந்திய வானம் – எஸ்.ராமகிருஷ்ணன்
மாநகரில் வாழும் மனிதர்களின் பட்டணத்துத் தனிமை பற்றி விவரிக்கிறார் எஸ்.ரா.
பெருநகரில் வாழுகிற மனிதர்களுக்கு வாழ்க்கைக்கு தேவையான எல்லாமும் கிடைத்தாலும், இந்த நகரம் தன்னுடையது இல்லை எனத் தனிமை உண்ர்வு கொள்கிறார்கள்.
ஒவ்வொரு மனிதனும் தன்னைச்சுற்றி ஒரு வட்டம் போட்டுக்கொள்கிறார்கள்.
அவ்வளவு தான் அவனது உலகம்.
கலை விமர்சகர் ஒகுமுரா சொன்ன 8 வகையான தனிமையை பற்றி விவரிக்கிறார்.
- துறவியின் தனிமை: உலகில் இருந்து தன்னை துண்டித்துக்கொண்டு இச்சைகளை துறந்து வாழும் தனிமை.
2. நோயாளியின் தனிமை:
உடல் நலிவுற்று நடமாட முடியாத நிலையில் உருவாகும் தனிமை.ஏக்கமும் நிராகரிப்பும் கொண்ட தனிமை அது.
3. காதலின் தனிமை:
தனித்திருக்கும் காதலனோ காதலியோ அடையும் தனிமை அது. கற்பனையில் சஞ்சாரிப்பதும் கனவு காண்பதும் தனிமையை வெறுப்பதும் இதன் இயல்பு.
4. போர் வீரனின் தனிமை:
யுத்தக் களத்தில் அல்லது எல்லையில் ஒற்றை மனிதனாகச் சமரை எதிர்நோக்கி காத்திருக்கும் தனிமை.என்ன நடக்கப்போகிறது எனத் தெரியாத பதைபதைப்பு. தன்னை முழுமையாக ஒப்படைத்துக் கொண்ட மனதின் தனிமை அது.
5. முதியவரின் தனிமை:
இது வாழ்வின் ஒரு நிலை. வாழ்வியல் கடமைகளைச் செய்து முடித்த ப்பிறகு உருவாகும் தனிமை.
6. கவிஞனின் தனிமை:
இயற்கையை நாடுவதும், கலைகளை தேடிச் செல்வதும், அதில் தன்னைக் கரைத்துக்கொள்வதுமான தனிமை.
7. அரசனின் தனிமை:
எப்போதும் தன்னைச்சுற்றி ஆள்கூட்டம். தனக்கு என ஓர் உலகம் கிடையாதா என ஏங்கி உருவாக்கிக் கொள்ளும் பிரபலங்களின் தனிமை.
8. கைதியின் தனிமை:
அது ஒரு தண்டனை. ஞாபகங்கள் மட்டுமே துணை. அதுவும் தூக்குக்கைதியாக இருந்து விட்டால்
சாவை எதிர்நோக்கி காத்திருக்கும் வலியுடன் கூடிய தனிமை அது.
இதில் முதலில் சொன்ன பட்டணத்துத் தனிமை, தனிநபரின் தனிமை அல்ல…அது ஊரின் சுபாவம்.