3.5 மணி நேரம் தொடர்ச்சியாக பேசினார். பண்பாடு, கலை, இலக்கியம், இந்திய வரலாறு, உணவு முறை, முதல்முறையாக சுதந்திரம் பெற்ற பின் நடந்த இந்திய தேர்தல், தமிழர்களின் உணவு முறை, முதன்முறையாக பெண்களுக்கு தையல் மெஷின் இந்தியாவில் விற்கப்பட்ட கதை, பெண்களின் ஓட்டுரிமை,
முதல்முறையாக இந்தியாவில் Census எடுக்கும் போது நடந்த நகைச்சுவை யான விஷயங்கள், தனது சிறுகதைகள், நூல்கள், வாசகர் வட்டம் போன்றவற்றில் நம்பிக்கையில்லாதது என சளைக்காமல்அருமையாக பேசினார்.
உபபாண்டவம், தாவரங்களின் உரையாடல், கோடுகள் இல்லாத வரைபடம் என மூன்று புத்தகங்கள் வாங்கினேன். உபபாண்டவம், தாவரங்களின் உரையாடல் எனக்கு கையெழுத்திட்டு கொடுத்தார்.