இயக்குநர் கேபிள் சங்கர் எழதி வெளியான சமீபத்திய புத்தகம். கனவைத்துரத்துதல்.
மின்னம்பலம் வெளியிட்டுள்ள இந்த புத்தகத்தில் இயக்குநர் கேபிள் சங்கர்
- சினிமா வியாபாரம்,
- O.T.T,
- Piracy in Cinema,
- G.S.T எப்படி சினிமா வியாபாரத்தை பாதிக்கிறது,
- புதியவர்களுக்கான களமாக மாறும் இணையம்
- கந்துவட்டி,
- Facebook, Twitter இல் மட்டும் Hit என கொண்டாடப்படும் படங்கள் என பல விஷயங்களை அடுக்கியிருக்கிறார்
வெற்றி அதன் ரிஷிமூலத்தை , நதிமூலத்தை ஆராயச் சொல்கிறது. தோல்வி இதே அளவு ஆர்வம் கொடுப்பதில்லை என்று கூறியிருக்கிறார்.
28% G.S.T தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள், மக்கள் என அனைவரையும் எப்படி பாதிக்க போகிறது என்பதை எழுதியிருக்கிறார்.
Facebook, Twitter இல் மட்டுமே போலியாக படங்கள் கொண்டாடப்படுவதை அழகாக சொல்லியிருக்கிறார்.
தங்களுக்கு பிடித்த hero வோடுரசிகர்களில் சிலர் Facebook, Twitter இல் துதிபாடிகளாக மாறி விடுவதால் சம்பந்தப்பட்டவர்களுக்கே
புரியாத குறியீடுகளை கண்டுபிடித்து எப்படி அதில் அவர்கள் விற்பன்னராகவும் இருக்கிறார்கள் என்பதை சொல்லியிருக்கிறார். எப்படி செய்தாலும் தேறாத படத்தை இவர்களால் தூக்கி நிறுத்த முடியாது என கூறியிருக்கிறார்.
Over The Top Technology
இணையம் மூலம் Content களை Apps மூலமாகவும், Smart TV, Android TVs மூலமாகவும் ஒளிபரப்பாகும் Channelகள்.
இளைஞர்கள் பலர் கிரிக்கெட் Match களை க்கூட இந்த App களில் பின் தங்கிய ஒளிபரப்பை(Delayed feed) பார்க்க ஆரம்பித்து விட்டார்கள் என்று குறிப்பிடுகிறார்.
- Netflix
- Amazon Prime Video
- Hot Star
- Sun Nxt
- Voot
- Viu
- Ozee
- YUPP TV
- SONY LIV
- ALTBALAJI
- Hungama
- Eros Now
- DaIly Motion
- Jio TV
- Airtel TV
என Channel களும் இணையம் மூலம் சேவை வழங்குவதை பற்றி கூறியிருக்கிறார்.
உலக சினிமா திருவிழா வில் தேர்வான Revelation, ரேடியோபெட்டி போன்ற படங்கள் Netflix இல் மட்டுமே வெளியாகி மக்களின் பாராட்டையும், தயாரிப்பாளர்களுக்கு லாபத்தையும் கொடுத்துள்ளன.
Short films எடுத்து க்கொண்டிருக்கும் பலரும் Webseries எடுக்கும் நாள் அதிக தூரத்தில் இல்லை எனக்கூறியிருக்கிறார்.
Piracy பற்றி எழுதும் போது இணையம் பிரம்மாண்டமாய் வளர வளர வீட்டில் உட்கார்ந்தபடியே ஒரு முழு நீளப்படத்தை மூன்று நிமிடங்களில் download செய்து பார்க்க முடிகிறது.
மக்களுக்கும் தாங்கள் செய்வது தவறு என்று உறுத்துவதில்லை.
சினிமா, Entertainmentக்காக செய்யும் திருட்டுக்கள், திருட்டுக்களாகவே மக்களுக்கு படுவதில்லை.
இன்றைய digital யுகத்தில் பாடுபட்டு பல கோடி ரூபாய் செலவு செய்து எடுத்த படத்தின் தரவுகள்(Data) தொலைந்து போக அதிக வாய்ப்பு இருப்பதையும், அதை கையாள்பவர் என்ன செய்வாரென்றே யாருக்கும் தெரியாது என்றும் கூறியிருக்கிறார்.